எதிர்வருகின்ற பொதுத் தேர்தலானது சிறுபான்மையினருக்கு மிகவும் சவால் மிக்க ஒன்றாகும். சிறுபான்மையினரின் உதவியின்றி ஆட்சி அமைக்க முடியுமென்று கனவு காணும் ஆளுந் தரப்பினரின் குறுகிய சிந்தனையை முறியடிப்பதற்கு சிறுபான்மையினர் சார்பில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வகையில் தமது வாக்குகளை அளிக்க வேண்டும். என முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் சார்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் 6ஆம் இலக்க வேட்பாளருமான எம்..எம்.மன்சூர் தெரிவித்தார்.
எதிர்வருகின்ற பொதுத் தேர்தல் எவ்வாறு கொள்வது சம்பந்தமான கட்சி ஆதரவாளர்களுடான கூட்டம் நேற்றுமுன்தினம்(22) முன்னாள் பா.உறுப்பினர் மன்சூரின் இல்லத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு தொடர்நதும் உரையாற்றுகையிலே -
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கணிசமான அளவு சிறுபான்மையினர் வாக்குகளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பெற்றுக் கொண்டார். ஆயினும் தமது வெற்றியை பெரும்பான்மையினரின் வெற்றியாகவும், சிறுபான்மையினர் அவரது வெற்றிக்கு பங்களிப்பு செய்யவில்லை. என்பது போலவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

தற்போது பொதுத் தேர்தலில் கூட சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு சிலரை பகடைக்காய் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார்கள். இவர்களினால் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு வாக்குகளைப் பெற்றுக் கொடுக்க முடியும். ஆனாலும், அவர்களினால் வெற்றிபெற முடியாது.
பொதுஜன பெரமுனவில் முஸ்லிம் ஒருவர் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே முன்னாள் அமைச்சர்களான அதாவுல்லா மற்றும் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களுக்கு அக்கட்சியில் போட்டியிடுவதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய இவர்கள் ஏமாந்து போயுள்ளனர்.

எதிர்வருகின்ற பொதுத் தேர்தல் சிறுபான்மையினருக்கு மிகவும் சவால் மிக்க ஒன்றாகும். சிறுபான்மையினரின் உதவியின்றி ஆட்சி அமைக்க முடியுமென்று கனவு காணும் ஆளும் தரப்பினரின் குறுகிய சிந்தனையை முறியடிப்பதற்கு சிறுபான்மையினர் ஒற்றுமையுடன் செயற்படல் வேண்டும்.

சிறுபான்மையினர் சார்பில் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படல் வேண்டும். அதற்காக தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.
சிறுபான்மையினர் தங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வாக்களிக்க வேண்டும். முஸ்லிம்கள் தங்களின் வாக்கு  களை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு அளிப்பதன் மூலமாக பாராளுமன்ற பிரதிநிதிகளை பாதுகாத்துக் கொள்ள முடியும். வெற்றி வாய்ப்பில்லாத கட்சிகளின் வேட்பாளருக்கு வாக்குகளை அளித்து அதனை சிதறடிக்காமல் சமூகதத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைில் வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடாது.

குறிப்பாக அம்பாறை மாவட்டம் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் சிறிய சிறிய தவறுகளையும், குற்றச்சாட்டுக்களையும் மனதிற் கொண்டு வாக்குகளை பல கட்சிகளுக்கு அளித்து வாக்குகளை சிதறடிக்கக்கூடாது. வாக்குகள் சிதறும் போது  எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் சீச்சியை ஏற்படுத்தும் என்பதனை மறந்து விடக்கூடாது.

முஸ்லிம் காங்கிரஸ் விமர்சனங்களுக்கு மத்தியில் பல சமூகப் பணிகளைச் செய்துள்ளது. முஸ்லிம் சமூகதத்திற்கு எந்தவொரு அநீயாயத்திற்கும் எதிராக தயக்கமின்றி முஸ்லிம் காங்கிரஸின் தலைமை குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸையும், அதன் தலைமையையும் சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. எமது சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றி சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் அரசாங்கத்திடம் கேள்வி கேட்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை முஸ்லிம் காங்கிரஸ்தான் மேற்கொண்டது. என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அங்கீகாரத்தை மேலும் பலப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் தங்களின் அரசியல் பலத்தை முஸ்லிம் காங்கிரஸின் மூலமாகவே நிரூபிக்க முடியும்.

 முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத சக்திகள் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள். முஸ்லிம்களின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இதனை நாம் உணர்ந்துள்ளோம். எனவே, முஸ்லிம்கள் தங்களின் வாக்குகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Blogger இயக்குவது.