கஹட்டோவிட்ட கிராமத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு சம்பந்தமான முக்கிய கூட்டமொன்று நேற்றைய தினம் 27/06/ 2020 கல்விக்கும் அபிவிருத்திக்குமான  இமாம் ஷாபி செண்டரில் இடம்பெற்றது.

கம்பஹா சுகாதார  கல்வி  அதிகாரி  கௌரவ விஜய ஜயகொடி  தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் மக்கள் சுகாதார வைத்திய அதிகாரி வேயங்கொட திருமதி வசந்தா ரணசிங்க அவர்களும்,மக்கள் சுகாதார நிர்வாக பரிசோதகர் கௌரவ அஜித் குமார அவர்களும், வல்கமுல்ல வட்டார சுகாதார பரிசோதகர் திரு.எம்.ஏ.பி.எப் தயானந்த அவர்களும் கஹட்டோவிட்ட அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர்களும் கஹட்டோவிட்ட 369,369ஏ கிராம சேவகர்களுக்கும் மற்றும் பல அதிகாரிகளும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் நோக்கம் கடந்த வாரம் கஹட்டோவிட்டாவில் ஆரம்பிக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை மக்கள் மத்தியில் இன்னும் கொண்டு போய் சேர்ப்பதுவும் மேலதிக நடவடிக்கைகள் எடுப்பதற்கான வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கி டெங்கு நோய் பரவலை கிராமத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதன் மூலம் பிரதேச சுகாதார நலனை உறுதிப்படுத்துவதுமாகும்.

இன்றைய கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன அவற்றின் விபரத்தை கீழே காணலாம்.

1.ஊரை 17 பிரிவாக பிரித்து பெண்கள் ஒரு வீதியில் அல்லது வீட்டுப்புறத்தில் இருக்கும்  அந்த பிரிக்கப்பட்ட ஒரு குழுவிற்கு கீழாக ஐம்பது உபகுழுக்களை அமைத்து ஒவ்வொரு குழுவிற்கும் பத்து வீடுகள் சுத்தப்படுத்த வேண்டும் என்ற அமைப்பில் பெண்கள் சேரந்து அந்த வீட்டு  சுற்று வட்டாரங்களை சுத்தப்படுத்த வேண்டும்.அந்த குழுவினருக்குள் அகப்படும் ஆண்கள் அந்த பிரிவுக்கு உட்பட்ட பாதை மற்றும் கால்வாய்களை சேரந்து சிரமதானம் செய்து சுத்தப்படுத்த வேண்டும்.

2.மேலே கூறிய சிரமதானத்தை ஊர்மக்கள் இணைந்து 28.06.2020 அதாவது நாளை செய்ய வேண்டும்.

3.நாளைய தினம் நடைபெறவுள்ள சிரமதானத்தின் முன்னேற்றம் அதன் நிலைமைகள் தொடர்பில் கூடி ஆராய்ந்து அதன் குறை நிறைகள் பற்றி ஆராய்வதற்கு எதிர் வரும் வெள்ளிக்கிழமை 3/06/2020 கஹட்டோவிட்ட அல் பத்றியா மகா வித்தியாலயத்தில் ஒரு கூட்டம்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிலே கலந்து கொண்டு இத்திட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் தேவையான ஆலோசனைகள் மற்றும் தேவையான உதவிகள் இதற்காக வழங்கப்படும் என்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4.இப்படியாக டெங்கு ஒழிப்பு தொடர்பில் மேற்படி விழிப்புணர்வு மற்றும் தேவையான உதவிகள் வழிகாட்டல்கள் ஆலோசனைகள் அதற்கான கூட்டங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்து கொடுத்த பின்னரும் ஊரின் சுகாதார விடயங்களில் சுற்றுச்சூழல் துப்புரவாக்கலிலும் கவனயீனமாக இருந்தால் அல்லது எவ்வித சிரமதானங்களும் செய்யப்படாது இருந்தால் சுற்றுச்சூழல் விடயத்தில் கவனயீனமாக இருந்தால் அவர்களுக்கு எத்தகைய தயவு தாட்சண்யமும் இன்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் இன்று நடைபெற்ற கூட்டத்தில்  தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மேற்படி  ஷாபி நிலையத்தின் பிரதான மண்டபத்தை  இன்றைய தினம் கூட்டம் கூடுவதற்காக இலவசமாக வழங்கியற்காக  கிராம அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு சங்கத்தின்  சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் அதன் தலைவர்  அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்கள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

தகவல் 
அல் ஹாஜ் பிர்தவ்ஸ் 
கஹட்டோவிட்ட கிராம அபிவிருத்தி மற்றும் 369ஏ பாதுகாப்பு சங்கத்தின் தலைவர்.

லுத்புல்லாஹ் - கஹட்டோவிட்ட ஒபிசியல் நியூஸ் பேஜ்










கருத்துரையிடுக

Blogger இயக்குவது.