எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை கைப்பற்றுவேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (17) நீர்கொழும்பில் நடைபெற்ற கட்சியின் பிராந்திய காரியாலய திறப்பு நிகழ்வில்  ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
“தவறான நிர்வாகம் காரணமாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் லீசிங் கம்பனிகள் வாகனங்களை கடத்துகின்றன. அரசாங்கத்தின் உத்தரவை அவர்கள் மதிக்கவில்லை.
அரசாங்கம் மாபியாக்களுக்கு அடிப்பணித்துள்ளது. டின் மீன் மற்றும் பருப்பு ஆகியவற்றுக்கு ஜனாதிபதி அறிவித்த கட்டுப்பாட்டு விலைக்கு என்ன ஆனது?"

"இதனிடையே தற்போதைய அரசாங்கம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐயாயிரம் என்ற விலையை தீர்மானித்துள்ளது.
எனினும், ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் எமது ஆட்சியின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது" எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களான காவிந்த ஜயவர்தன, ரஞ்சன் ராமநாயக்க, ஹர்சண ராஜகருணா, சீராஸ் மொஹமட், சசி குமார், சரணலால் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Blogger இயக்குவது.