மான்செஸ்டரில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் மே.திவுகள் அணியை 269 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது .

இங்கிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என களம் இறங்கின.

நாணயச் சுழற்சியில் வென்ற மே.திவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 369 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மே.திவுகள் முதல் இன்னிங்சில் 197 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 172 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடியது. அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்கள் எடுத்திருக்குமபோது 2-வது இன்னிங்சை நிறுத்திகன் கொண்டது. ரோரி பேர்ன்ஸ் 90 ஓட்டங்களும், சிப்லி 56 ஓட்டங்களும, ஜோ ரூட் 68 ஓட்டங்களும் (ஆட்டமிழக்கமால்) எடுத்தனர்.

பின்னர் 399 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மே.திவுகள் களம் இறங்கியது. நேற்று முன்தினம் 3-வது நாள் ஆட்ட முடிவில் மே.திவுகள் 2 விக்கெட் இழப்பிற்கு 10 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

நேற்றைய 4-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் இரத்து செய்யப்பட்டது. இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்டூவர்ட் பிராட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மே.திவுகள் 2-வது இன்னிங்சில் 37.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 129 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் இஙகிலாந்து 269 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. 2-வது இன்னிங்சில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் ஐந்து விக்கெட்டும் வீழ்த்தினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஸ்டூவர்ட் பிராட் தெரிவு செய்யப்பட்டதுடன், போட்டித் தொடர் ஆட்ட நாயகர்களாக ஸ்டூவர்ட் பிராட் மற்றும் மே.திவுகள் அணி வீரர் ரொஸ்டர்ன் ஷேஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.