2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இதன் பின்னர் அக்ரஹார காப்புறுதியை வழங்குவதற்கு அரசாங்கம் வசதிகளைச் செய்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  

அரசாங்க ஊழியர்களின் சேவைநலனுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அக்ரஹார காப்புறுதியின் மூலம் தற்பொழுது அரச சேவையில் ஈடுபட்டுள்ளவர்களைப் போன்று அரச சேவையில் ஓய்வுபெற்றவர்களுக்கும் குறிப்பிட்ட பயன்களை வழங்கும் பொருட்டு விரிவுபடுத்துவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.  

இதுவரையில் அக்ரஹார காப்புறுதி பயன்கள் உரித்தாவது 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மாத்திரமே.

இருப்பினும் ஓய்வூதியக்காரர்களில் பெரும்பாலானோர் இந்த தினத்திற்கு முன்னர் ஓய்வுபெற்றவர்களாவர்.

இந்த நிலைமை தொடர்பில் ஓய்வூதியக்காரர்களின் சங்கத்தினால் அரசாங்கத்துக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கவனத்தில்கொண்டு 2016 ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கும் அக்ரஹார காப்புறுதி திட்டத்திற்குள் பிரவேசிப்பதற்கு வசதியைசெய்வது தொடர்பில் திறனாற்றல் அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் மற்றும் அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரும் சமர்ப்பித்த பரிந்துரைக்கு சமீபத்தில் கூடிய அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.