அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் இதுவரை 15 முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு 16 ஆம் திகதி வரை குறித்த ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ பதவிகளை வகித்த அரச அதிகாரிகள்இ அரச கூட்டுதாபன ஊழியர்கள், ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸ் சேவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல பிரிவினரிடம் இருந்து இதுவரை 134 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவால் 46 முறைப்பாடுகள் குறித்த ஆரம்பக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்துள்ளன.

இவற்றில் 15 முறைப்பாடுகள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பாக முன்னாள் நீதவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகே அளித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனை கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.