- 40 அரசியில் கட்சிகள்; 313 சுயேச்சைக் குழுக்கள் களத்தில்
- 225 பேரை தெரிவு செய்ய 7,452 வேட்பாளர்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தல் கண்காணிப்புக் கடமையில் 5,000 பேரை ஈடுபடுத்தப்படவுள்ளதாக, பெப்ரல் (Pயுகுகுசுநுடு) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இவர்களில் நீண்டகால கண்காணிப்பாளர்களும் உள்ளடங்குவதோடு, தபால் மூல வாக்களிப்புக்கும் குழுவொன்று ஈடுபடுத்தப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

இம்முறை பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும், அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகள் மற்றும் 313 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் நாடு முழுவதிலுமுள்ள மாவட்டங்களிலிருந்தும் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதோடு, தேசிய பட்டியல் மூலம் 29 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தபால் மூல வாக்களிப்புக்கான கண்காணிப்புக்காக, அரசியல் ரீதியில் அதிக ஆர்வமுள்ள பிரதேசங்கள் மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிமுள்ள பிரதேசங்களைக் கருத்திற்கொண்டு, 856 வாக்கெடுப்பு நிலையங்களை தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் தினத்தன்று இடத்தில் நிலைநிறுத்தப்பட்டு கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக 3,000 பேரை ஈடுபடுத்துவதற்காக பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வாக்களிப்பு நிலையத்திற்கு இடையிலான நிலைமையைக் கண்காணிப்பதற்கான நடமாடும் கண்காணிப்பு பணியில் 200 பேர் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, இதற்காக 1,000 கண்காணிப்பாளர்கள்  ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வாக்கெண்ணும் நிலையங்களிலும் கண்காணிப்பாளர்களை நிறுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, மொத்தமாக 5,000 இற்கும் அதிகமான கண்காணிப்பாளர்களை தேர்தல் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.