தொல்லியல் மையங்களை காப்பதற்கான செயலணியில் தமழ் பேசும் பிரதிநிதிகளை இணைக்க இணக்கம்

www.paewai.com
By -
0

கிழக்கின் தொல்லியல் மையங்களை காப்பதற்கான செயலணியில் தமழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி தனது இணக்கத்தினை தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதியினால் குறித்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கவனத்திற் கொண்டே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நிபுணர்கள் விரைவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)