வேட்பாளர்களின் பெயர், விருப்பு இலக்கங்கள் அடங்கிய மேற்சட்டைகள், தொப்பிகள் மற்றும் முகக்கவசங்களை அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு செல்வோரையும் வீடுவீடாக சென்று பிரசாரங்களில் ஈடுபடுவோரையும் கைது செய்யுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள தினத்தில் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடுமாறு அனைத்து தபால் மூல வாக்காளர்களிடமும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இம்முறை பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7,05,085 பேர் தகுது பெற்றுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.