எங்கள் சக்தி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ தேரரை கைதுசெய்வதற்கு கண்டி பொலிஸார் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக அவரை கைதுசெய்ய பல வாரங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அஸ்கிரிய மகா விகாரை வளாகத்தில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி நடவடிக்கைக்காக விமல திஸ்ஸ தேரரால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக, விகாரையின் தலைமை தேரர் கலங்குட்டியா ராகுலா தேரார் அளித்த முறைப்பாட்டுக்கு அமையவே விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.