"நான் முதலமைச்சராக, கபினட் அமைச்சராக பதவிகளை வகித்து பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கிறேன். யாருக்கும் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை" இன்று முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான காமினி விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்தார்.

வத்தளை பிரதேசத்தில் நேற்றைய தினம் (02) நடைபெற்ற பிரச்சார நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார். 

"நீங்கள் முதலாவதாக தொலைபேசி சின்னத்திற்கு புள்ளடியினை இட வேண்டும். அது சஜித் பிரேமதாசவினை பிரதமராக்குவதற்கு உதவும். உங்களுக்கு தெரியும், கதிர்காமத்தில் இருக்கும் கடவுளுக்கு 12 கைகள் உள்ளன. எனக்கும் அவ்வாறு 12 கைகள் உள்ளது போன்று வேலைகளை செய்ய முடியும். நாம் கம்பஹா மாவட்ட மக்களின் வாழ்க்கைக்கு ஒளி தருவோம்" என்று மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு வேட்பாளரான சசிகுமாரும் கலந்து கொண்ட உரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.