பா.நிரோஸ்

ஒரு கட்சியை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்றத்தில்  முன்வரிசை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாடாளுமன்ற அனுவங்களைக் கொண்ட சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும், எதிர்க்கட்சியில் பின் வரிசையே வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு ஒழுங்குப் பிரச்சினை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு, ஆளும் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கும் எதிர்க்கட்சியின் பின்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் இதன்போது கூறினார்.

இது தொடர்பில் சபாநாயகர் கவனஞ்செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், “கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்படும்” என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.