20வது அரசியலமைப்பு திருத்தச்சட்ட வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள்

♦ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூற வேண்டிய அவசியமில்லை (19வது அரசியலைப்பு திருத்தத்தின் படி ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமைப்பாடு உண்டு) 

♦அரசியலமைப்பு பேரவையாகக்காணப்பட்ட சபை பாராளுமன்ற சபையாக மாற்றப்பட்டுள்ளது.(19வது திருத்தத்திற்கமைய அரசியலமைப்பு சபையில் அங்கம் வகித்த மூன்று சிவில் உறுப்பினர்கள் அங்கத்துவம் நீக்கப்பட்டுள்ளது) 

♦ஜனாதிபதி அமைச்சரவை பொறுப்புக்களை வகிக்க முடியும் (19 வது திருத்தத்துக்கமைய ஜனாதிபதி அமைச்சரவை பொறுப்புக்களை வகிக்க முடியாது)

♦ஜனாதிபதியினால் அமைச்சரொருவரை நியமிக்க முடியும்.(19வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் படி பிரதமரே அமைச்சரொருவரை சிபாரிசு செய்ய முடியும்)

♦இரட்டை பிரஜாவுரிமையைக்கொண்ட ஒருவர் பாராளுமன்றம் செல்ல முடியும்

(19வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் படி இரட்டை பிரஜாவுரிமையைக்கொண்ட ஒருவர் பாராளுமன்றம் செல்ல முடியாது)

♦ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் மிகக்குறைந்த வயதெல்லை 30ஆக குறைக்கப்பட்டுள்ளது.(19வது அரசியல் அமைப்பு திருத்தத்தில் 35 ஆகக்காணப்பட்டது)

♦பாராளுமன்றமானது கூட்டப்பட்ட தினத்திலிருந்து ஒரு வருடமானது நிறைவுற்ற பின்னர் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியும்.(19வது அரசியல் அமைப்பு திருத்தத்தில் நான்கரை வருடங்களுக்கு முன்னதாக ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது,அவ்வாறு நான்கரை வருடங்களுக்குள்ளாக பாராளுமன்றத்தை கலைப்பதாயின் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உறுப்பினர்களின் சம்மதம் பெறப்படுதல் வேண்டும்)

ஆதம் லெப்பை ஆதிப் அஹமட்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.