Gampaha Football League - 2019/20 : ஸ்ரீ போதி, கஹட்டோவிட்ட JF, ஜெட்லைனர்ஸ், ரன்பொகுனுகம கழகங்கள் அரையிறுதிக்கு தெரிவு!

Rihmy Hakeem
By -
0


ன்றைய தினம் (13) கம்பஹா ஸ்ரீ போதி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2020 கம்பஹா லீக் கால்பந்தாட்ட தொடரின் மூன்றாவது காலிறுதி போட்டியில் திஹாரிய யுனைடட் கழகத்தினை பெனால்டி அடிப்படையில் வீழ்த்திய கஹட்டோவிட்ட JF விளையாட்டுக் கழகம் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

மேலும் நான்காவது காலிறுதி போட்டியில் கஹட்டோவிட்ட FC இனை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கம்பஹா ஜெட்லைனர்ஸ் கழகம் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

தொடரின் அரையிறுதிப் போட்டிகள் அடுத்த வாரம் (20) நடைபெறவுள்ளதுடன், முதலாவது அரையிறுதி போட்டி கம்பஹா ஸ்ரீ போதி மற்றும் கஹட்டோவிட்ட JF கழகங்களுக்கிடையிலும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் கம்பஹா ஜெட்லைனர்ஸ் மற்றும் ரன்பொகுனுகம கழகங்களுக்கிடையிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)