எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஜபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடரில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டி20 ஆட்டம் இளைஞர்களுக்கானது என்பது 2007 டி20 உலக கிண்ண கிரிககெட் போட்டியில் நிரூபித்தது தோனி தலைமையிலான இந்திய அணி. சச்சின், கங்குலி, டிராவிட் என மூத்த வீரர்கள் இல்லாமல் இளைஞர்களை மட்டுமே கொண்ட இந்திய அணி முதல் டி20 உலக கிண்ணத்தை வென்றது.

ஆனால் அதே தோனி தலைமையிலானசென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் டி20 ஆட்டத்துக்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதையும் கடந்த இரு வருடங்களாக நிரூபித்து வருகிறது. 2018-ல் ஐபிஎல் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த வருடம் மும்பைக்கு எதிரான இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது.

ஐபிஎல் 2020 போட்டியில் விளையாடவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிரேஷ்ட வீரர்கள்

தோனி - 38 வயது

வாட்சன் - 38 வயது

டு பிளெசிஸ் - 35 வயது

டுவைன் பிராவோ - 36 வயது

இம்ரான் தாஹிர் - 40

அ.ராயுடு - 34

கெதர் ஜாதவ் - 34

இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான சுரேய் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு முறையே 33, 40 வயது ஆகிவிட்டன. இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த வருடம் விளையாடியிருந்தால் 11 பேரில் 9 பேர் 33 வயதைக் கடந்தவர்களாக இருந்திருப்பார்கள்.

சீனியர் சிட்டிசன்களைக் கொண்ட அணி என்று பலர் கேலி, விமர்சனங்கள் செய்தாலும் அனுபவம் வாய்ந்த அணியாக உள்ளதே சென்னை சூப்பர் கிங்ஸ் இற்கு பல சமயங்களில் கைகொடுத்துள்ளது. அதனால்தான் கடந்த இரு வருடங்களிலும் அதன் பேர், புகழ், சாதிக்கும் முனைப்பு போன்றவை துளியும் குறையவில்லை.

இளைஞர்களைக் கொண்டு மட்டுமல்ல 33 வயதைக் கடந்த வீரர்களைக் கொண்டும் தோனியால் சாதிக்க முடியும் என்பதுதான் நிதர்சனம்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.