(செ.தேன்மொழி)

அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உருவாக்கியவர் யார் என்பதை கூறும் அளவிற்கு ஆளும் தரப்பினருக்கு முதுகெலும்பு இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்தார்.

இதேவேளை, ஜனநாயக ஆட்சி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தி , சர்வாதிகார ஆட்சிக்கான ஏற்பாடுகளை கொண்டமையப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமப்பு திருத்தத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு போதும் ஒத்துழைப்பை வழங்காது என்றும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர்,

தற்போது திருத்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் , அமைச்சர்களுக்குமே எதுவும் தெரியாது என்று கூறியிருக்கின்றார்கள்.

புதிய அரசியலமைப்பொன்றை தயாரித்து வருவதாகவும் , அது வரையிலேயே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ளப் போவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சர்வாதிகார ஆட்சிக்கான வழிவகைகளையே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் காணப்படுகின்றது. இந்நிலையில் மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 20 ஆவது திருத்தத்திற்கு நாங்கள் ஒரு போதும் ஒத்துழைப்பை பெற்றுக் கொடுக்க மாட்டோம். குறைந்த பட்சம் 'வியத்மக' அமைப்பினரிடமாவது இந்த திருத்தம் தொடர்பில் அரசாங்கம் விளக்கத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.