இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான MediaCorps நிகழ்ச்சித் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சீதுவை நகரில் அமைந்துள்ள ஹோட்டல் றமதாவில்செப்டம்பர் 11 தொடக்கம் 16 வரைஇடம்பெற்றஇந்நிகழ்ச்சித்திட்டத்தில் நாட்டின் சகல பாகங்களிலும்இருந்து 25 இளம் ஊடகவியலாளர்கள் பங்குபற்றினர்

அவர்களில் 12 சிங்கள, 6 தமிழ் மற்றும் 7 முஸ்லிம் ஊடகவியலாளர்கள், இவர்களில் ஆண்கள் 18 பேரும் பெண்கள் 7 பேரும்உள்ளடங்கியிருந்தனர்.

பல்வகைத்தன்மை, இன மற்றும்மொழிப் பின்புலங்களைக் கொண்ட இவ்வூடகவியலாளர்கள்அச்சு, இலத்திரனியல் மற்றும் இணைய ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்திருந்தனர். இந்த ஊடகவியலாளர்கள் முன்னதாக நான்கு இணையவழிக் கருத்தரங்குத் தொடர்களில் பங்குபற்றியிருந்தனர்.

இக்கருத்தரங்குத் தொடர்கள் (i) பல்வகைத்தன்மை மற்றும் பன்மைத்துவம் என்பவற்றின் மீதானகூருணர்திறன், (ii) முரண்பாடு உணர்திறன் மிக்க ஊடகவியல், (iiiபால்நிலை உணர்திறன் கொண்ட ஊடகவியல் மற்றும் (iஎ) ஊடகவியலுக்கான சமூக ஊடகம் என்ற கருப்பொருட்களில்நடாத்தப்பட்டன. ஊடகவியலாளர்கள் நேரடியாகக் கலந்துகொண்ட பயிற்சிநிகழ்ச்சித் திட்டத்துக்கு முன்னதாகநடத்தப்பட்ட இவ்விணையவழிக் கருத்தரங்குகள் குறிப்பிட்டதுறைகளில் நிபுணத்தவம் கொண்ட வாண்மையாளர் வரிசைஒன்றினால் நடத்தப்பட்டமை ஒரு விசேட அம்சமாகும்.

அண்மையில் சீதுவை நகரில் ஊடகவியலாளர்கள் நேரடியாகக்கலந்து கொண்ட பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் SDJF அமைப்பின்நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் திரு. முஹம்மட் அஸாட்அவர்களின் தலைமையில் நிகழ்ந்த சிறிய அங்குரார்ப்பணநிகழ்வொன்றுடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் உரையாற்றியதிரு.முஹம்மட் அஸாட் 'மீடியாகோர்ப்ஸ் நிகழ்ச்சித்திட்டத்தில்இணைந்து கொள்ள நூற்றுக்கணக்காண இளம்ஊடகவியலாளர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில்அவர்களில் முதன்மையானவர்களையே நாம் இந்நிகழ்ச்சித்திட்டத்துக்காக தெரிவு செய்தோம். நீங்கள்உங்களின்ஊடகவியலாளர்கள் மற்றும் கதை சொல்பவர்கள்என்ற வகிபாகத்தின் ஊடாக இலங்கையின் சமாதானம் மற்றும் சகவாழ்வை வலுப்படுத்துவதற்கு தலைமையேற்கும்சக்திகளில் ஒன்றாக செயற்படுவீர்கள் என நாம்நம்புகின்றோம்' எனத் தெரிவித்தார். அங்குரார்ப்பண நிகழ்வின்போது ஒவ்வொரு பின்தொடரல் நிலைமாணவரும் ஸ்மார்ட்போன் (கையடக்கத் தொலைபோசி) ஒன்றுஉள்ளடங்கிய MoJo (கையடக்கத் தொலைபேசி ஊடகவியல்) கருவித்தொகுதி ஒன்றைப் பெற்றுக் கொண்டனர். நடைமுறைகையடக்கத் தொலைபேசி ஊடகவியல் அம்சங்களில் பிரதானகவனம் கொண்டதாக அமைந்திருந்த இப்பயிற்சி நிகழ்வுபயிற்றுனர்கள் திரு. கபில ராமநாயக்க மற்றும் திரு. முஹம்மதுஅஸ்வர் ஆகிய பயிற்றுனர்கள் அத்துடன் SDJF அமைப்பின்பணியாளரான திரு. றுவான் போகமுவ ஆகியோரால்நடத்தப்பட்டது.

கையடக்கத்தொலைபேசி ஊடகவியல்(MoJo) என்ற அம்சத்துக்கு மேலதிகமாக பின்தொடரல்மாணவர் நிலை ஊடகவியலாளர்கள் மனித விருப்பு மிக்க உயர்தரம் கொண்ட கையடக்கத்தொலைபேசிக் கதைகளைஉருவாக்குவதற்கு அவசியமான ஊடகவியல் திறன்களையும்அதிக அளவில் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினைப்பெற்றுக்கொண்டனர்.

 இதன் அடிப்படையில், பயிற்சி நிகழ்வில்நேர்காணல் உத்திகள், கேள்விகள் கேட்டல், தரவுஊடகவியல், யதார்த்தங்களை சோதனையிடல்,சரிபார்த்தல்மற்றும் காட்சயூடான கதை சொல்லல் போன்ற விடயங்களில்அமர்வுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவ்விடயங்கள்பின்தொடரல் மாணவர் நிலை ஊடகவியலாளர்கள் யதார்த்தம்மிக்க மற்றும் சான்றுகளின் அடிப்படையில் அமைந்த காட்சிக்கதைகளை உருவாக்குவதை ஊக்குவித்தது.

பின்தொடரல்நிலை மாணவர்கள் தாம் பயிற்சியின் போது கற்றுக்கொண்டகையடக்கத் தொலைபேசிஊடகவியல் திறன்களைநடைமுறையில் பிரயோகிக்கவும் அவர்களுக்கு வாய்ப்புவழங்கப்பட்டது. நீர்கொழும்புப் பிரதேசத்தின் மொரவலமற்றும் துவபிட்டிபான பகுதிகளுக்கு கள விஜயம்ஒன்றைமேற்கொண்ட பின்தொடரல் நிலை மாணவர்கள்அக்கரையோரப் பகுதிகளில் மீனவ சமூகத்தைபாதிக்கும்விடயங்கள் மற்றும் நீர்கொழும்புக் கடற்கரையைபாதிக்கும் சூழல் பிரச்சினைகள் பற்றி கதைகளின்தேடலில்கதை வசனம் எழுதுதல், அடிப்படை காணொளிப் பதிவுகளைமேற்கொள்ளல்,நேர்காணல் உத்திகள் மற்றும் காணொளித்தொடரொன்றைப் படம் பிடித்தல் போன்ற விடயங்களில்அனுபவங்களைப் பெற்றுக் கொண்டனர். கள விஜயத்தைப்பூர்த்தி செய்து திரும்பிய ஊடகவியலாளர்கள் அவர்களின் களஆலோசகர்களின் ஆதரவு மற்றும் வழிகாட்டலில் 25 கையடக்கத்தொலைபேசிக் கதைகளை மட்டறுத்து பூர்த்திசெய்தனர்.

இவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட கையடக்கத்தொலைபேசிக் கதைகள் அவற்றின் ஊடகவியல் நியமங்கள்மற்றும் காட்சித் தரம் என்பவற்றை காணொளிகளின் காட்சிஅலகுகளை ஒன்றன் பின் ஒன்றாக மதிப்பிடும் வரன்முறைக்குஏற்ப கள ஆலோசகர்கள் மற்றும் இணைநிலையினரால்மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த மீளாய்வின் அடிப்படையில்அருளானந்தம் டேவிட், கோசல குணவர்த்தன மற்றும்நகுலேஸ்வரன் புவிகரன் ஆகிய மீடியாகோர்ப்ஸ் பின்தொடரல்நிலை மாணவர்களால் உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த மூன்றுகையடக்கத் தொலைபேசிக்கதைகளுக்கு விருது வழங்கிகௌரவிக்கப்பட்டதுடன் ஏனைய பின் தொடரல் நிலைமாணவர்கள் தமது முதலாவது கையடக்கத் தொலைபேசிக்கதையை உருவாக்கியமைக்காக பாராட்டுச் சான்றிதழ்களைப்பெற்றுக்கொண்டனர். மீடியாகோர்ப்ஸ் பின்தொடரல் மாணவர்நிலை நிகழ்ச்சித்திட்டமானது ஜனநாயக இலங்கைக்கானஊடகவலுப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாகஇலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF), ஆய்வு மற்றும் பரிமாற்றங்களுக்கான சர்வதேசச் சபை (IREX) மற்றும் USAID நிறுவனம் என்பவை இணைந்துஅமுல்படுத்தப்படும்

நிகழ்ச்சித்திட்டமாகும். மூன்று வருடங்களாகஅமுல்படுத்தப்பட்டு வரும் இந்த பின்தொடரல் மாணவர் நிலைநிகழ்ச்சித்திட்டத்தில் இது வரை ஆறு தொகுதியாக 133 இளம்ஊடகவியலாளர்கள் பயிற்றப்பட்டுள்ளனர். இவ்வூடகவியலாளர்கள் இதுவரை 300 இற்கும் மேற்பட்டசுவாரசியம் மிக்க கையடக்கத் தொலைபேசி மற்றும் பல்ஊடகக் கதைகளைத் தயாரித்துள்ளனர். SDJF அமைப்புஎதிர்காலத்திலும் இதையொத்த நிகழ்ச்சித் திட்டங்களைநடத்த எண்ணியுள்ளது.மேலதிக விபரங்களைப் பெற www.ldjf.org என்ற இணையத்தளத்திற்கு பிரவேசியுங்கள்.









கருத்துரையிடுக

Blogger இயக்குவது.