அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் கடந்த 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை கல்லூரி அதிபர் ஜனாப். எம். ஏ. எம். எம். அஸ்மிர் அவர்களது தலைமையில்  பாடசாலையில் நடைபெற்றது. 

கடந்த காலத்தில் பழைய மாணவர் சங்கம் ஊடாக இடம் பெற்ற முன்னேற்ற அறிக்கையை பழைய மாணவர் சங்க செயலாளர் சகோதரர் எம். ஆர். எம். ரஹீம் அவர்கள் முன்வைத்தார். தமது காலப் பகுதியில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.

அடுத்து பாடசாலை தற்போதைய நிலை தொடர்பாக அதிபர் அவர்கள் அழகான அறிக்கை ஒன்றை சபையோருக்கு சமர்ப்பித்தார். அதில் பாடசாலை கடந்த காலங்களில் அடைந்துகொண்ட சாதனைகள், அவற்றில் பழைய மாணவர்கள் ஆற்றிய பங்கு, பாடசாலையில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் போன்றன விளக்கப்பட்டன.

அடுத்து இடம் பெற்ற கலந்துரையாடலில் சபையோர் பலரும் தமது கருத்துக்களை முன் வைத்தனர். பொதுக்கூட்டத்தில் பழைய மாணவர்களது பங்களிப்பு போதாமல் உள்ளமை கூடிய கவனத்தைப் பெற்றது. 

அடுத்து விடைபெற்றுச் செல்லும் செயற்குழு உறுப்பினர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

தொடர்ந்து இடம் பெற்ற புதிய செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தெரிவு செய்யப்பட்ட சகோதரர்களின் பெயர் விபரங்கள் வருமாறு...

1. M.F.M. Farhan

2. M.S.K. Faroos Khan

3. A.M. Shahmy

4. M.M.M. Siraj

5. M.M. Arbakhan

6. M.N.M. Yasar

7. A.M.M. Safras

8. M.N.M Rajas

9. A.B.M. Azmy Sharaf

10. A.M. Ikram

தெரிவு செய்யப்பட்ட புதிய செயற்குழுவுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

சபையில் பெறப்பட்ட முடிவுகளுக்கமைய ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் பழைய மாணவர் சங்கத்துக்கான பிரதிநிதி ஒருவரை அந்தந்த வகுப்புகள் தெரிவு செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் ஊடாகவே எதிர்காலத்தில் தொடர்பாடல்கள் இடம் பெறும்.

தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய செயற்குழுவுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி பாடசாலையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றிச் செல்ல அனைத்து பழைய மாணவர்களும் ஒத்துழைக்குமாறு பணிவோடு வேண்டுகிறேன.

அஹ்ஸன் ஆரிப் 

செயலாளர்

பாடசாலை அபிவிருத்திக் குழு


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.