இங்கிலாந்துக்கு - அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியாவும், 2 வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன.

இவ்விரு அணிகளுக்கிடையிலான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறவுள்ளது. இது தொடரை நிர்ணயிக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சியின் போது பந்து தலையில் தாக்கியதால் முன்னெச்சரிக்கையாக இரண்டு ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் இன்றைய ஆட்டத்தில் களம் திரும்புவார் என்று தெரிகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.