இந்திய தேசிய நில அதிர்வு மையம் கடந்த மார்ச் 1 முதல் செப்டம்பர் 8 வரை இந்திய முழுவதும் 413 நிலநடுக்கங்களை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய பூமி அறிவியல் அமைச்சகம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இந்தியாவில் கடந்த மார்ச் 1 முதல் செப்டம்பர் 8 வரை நாடு முழுவதும் 413 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அதில், 135 நிலநடுக்கங்கள் 3.0 ரிக்டர் அளவிற்கு குறைவாகவும், 153 நிலநடுக்கங்கள் 3.0 முதல் 3.9 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளது.

மேலும், 114 நிலநடுக்கங்கள் 4.0 முதல் 4.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது, இதில் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 11 நிலநடுக்கங்கள் மட்டுமே 5.0 முதல் 5.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதில் பழைய கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.