புதிய அரசியல் அமைப்பிற்கான அடிப்படை சட்டமூலத்தை தயாரிப்பதற்கான புத்திஜீவிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு தேவையான புதிய அரசியல் அமைப்பை வகுப்பதற்குரிய சட்டமூலத்தை தயாரிக்கவென ஒன்பது பேர் கொண்ட புத்திஜீவிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தக் குழுவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மனம் வின்வருமாறு:

03. 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தல் மற்றும் புதிய அரசியல் யாப்பு ஒன்றுக்கான திருத்த வரைபு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பில் 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது திருத்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை மற்றும் குறைபாடுகளை களைவதற்காக குறுகிய கால நடவடிக்கை என்ற ரீதியில் 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்திற்கான திருத்த சட்ட மூலத்தை வகுப்பதற்காக சட்ட திருத்த வரைபிற்கு ஆலோசனை வழங்குவதற்கு 2020.08.19 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அமைவாக சட்ட திருத்த வரைபு பிரிவினால் தயாரிக்கப்பட்ட திருத்த சட்ட மூலம் நீதி அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திருத்த சட்ட மூலம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 13 ஆவது திருத்தம் மற்றும் அதற்கு ஏற்புடையதாகாதது என்பதுடன், அரசியல் யாப்பின் 82 (5) யாப்பிற்கு அமைவாக பாராளுமன்றத்தில் 3 இல் 2 இற்கு குறையாத வாக்களிப்புடன் நிறைவேற்றக் கூடிய நிலை இருப்பதாகவும் சட்டமா அதிபரினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலைப்பாடு அமைச்சரவையினால் கவனத்திற் கொண்டு அந்த சட்ட திருத்த மூலத்தை அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2020.08.19 ஆம் திகதி அன்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்ட வகையில் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரையை கவனத்திற் கொண்டு புதிய அரசியல் யாப்பு ஒன்றுக்கான அடிப்படை திருத்த சட்ட மூலத்தை தயாரிப்பதற்காக கீழ் குறிப்பிடப்பட்ட நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா அவர்கள் (தலைவர்)
 ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன அவர்கள்
 ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா அவர்கள்
 ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன அவர்கள்
 பேராசிரியர் திருமதி நசீமா ஹமூர்தீன் அவர்கள்
 கலாநிதி எ.சர்வேஸ்வரன் அவர்கள்
 ஜனாதிபதி சட்டத்தரணி சமன்த ரத்வத்தே அவர்கள்
 பேராசிரியர் வசன்த செனவிரத்ண அவர்கள்
 பேராசிரியல் ஜி.எல்.பீரீஸ் அவர்கள்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.