-சுந்தரலிங்கம்-

கொரோனா வைரஸ் (கொவிட் 19) அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொட்டும் மழை, கடும் காற்று போன்றனவற்றிக்கு மத்தியில் பல சவால்களுக்கு முகம் கொடுத்து தமது எதிர்கால வாழ்வினை தீர்மானிக்கின்ற உயர்தர பரீட்சைக்கு மலையக மாணவர்கள் இன்று (12) திகதி பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமான உயர்த பரீட்சைக்கு இம்முறை நாடாளவிய ரீதியில் 362,824 மாணவர்கள் 2,648 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் மிகவும் உட்சாகமாக வருகை தந்திருந்தனர்.

உயர்தர பரீட்சை நடைபெறும் சகல பாடசாலைகளிலும் சுகாதார அறிவுரைகளுக்கு அமைவாக நேற்று (11) தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் தோற்றுவற்கான சுகாதார ஏற்பாடுகளை சுகாதார அறிவுறுத்தல்கனுக்கு அமைவாக பரீட்சைத்திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைவாக கைகழுவுதல், மாணவர்களுக்கு இடையே இடைவெளி பேணுதல், முகக்கவசம் அணிதல் உட்பட சுகாதார பழக்க வழக்கங்கள் பின்பற்றப்பட்டிருந்தன.

குறித்த சுகாதார நெறிமுறைகளை பின் பற்றுகிறார்களா என்பது தொடர்பாக ஆராயவதற்காக பொது சுகாதார பரிசோதகர்களும் பரீட்சை நிலையங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

இதேவேளை, ஹட்டன் கல்வி வலயத்தில் இம் உயர்தர் பரீட்சைக்காக ஹட்டன் கல்வி வலயத்தில் 25 நிலையங்களில் பரீட்சைகள் நடைபெற்றன.

இப்பரீட்சைக்காக 2,192 மாணவர்கள் தோற்றியுள்ளதாகவும், இவர்களில் தமிழ் மொழி மூலம் 1,192 மாணவர்களும் சிங்கள மொழி மூலம் 800 மாணவர்களும் தோற்றியிருப்பதாக தனிப்பட்ட பரீட்சாத்திகள் 969 மாக மொத்தம் 3,161 பேர் அம் முறை பரீட்சை எழுதுவதாகவும் ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

குறித்த மாணவர்கள் இவ்வருட நடைபெறும் பரீட்சையில் சகல சவால்களை வெற்றி கொண்டு பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற வாழ்த்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.