மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் பொது மக்கள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொவிட் - 19 காரணமாக நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைக்கு மத்தியில் 2020 ஒக்டோபர் மாதம் 7 ஆம், 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட அலுவலகம் மற்றும் வெரஹெர அலுவலகம் பொது மக்களுக்காக திறக்கப்படமாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பொது மக்கள் ஏதேனும் சிரமங்களுக்கு உள்ளாகுவீர்களாயின் அது தொடர்பில் வருந்துவதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.