2020 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 10 மாணவ மாணவிகள் 200/200 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதன்படி, 06 மாணவர்களும், 04 மாணவிகளும் 200/200 புள்ளிகளை பெற்று சித்தி பெற்றுள்ளனர்.
அவர்களது விபரம்:
- காலி சங்கமித்தா மகளீர் பாடசாலையின் சியதி விதும்சா கருணாதிலக
- இங்கிரிய சுமனஜோதி கனிஷ்ட வித்தியாலத்தின் தெவிலி யசஸ்மி திலகரத்ன
- எஹலியகொட ஆரம்ப பாடசாலையின் செனுதி தம்சரா
- கண்டி உயர் மகளீர் பாடசாலையின் யெஹாரா யெத்மினி யாபா
- எம்பிலிபிட்டி ஜனாதிபதி வித்தியாலயத்தின் தொவிந்து சிரத்தித்
- மருதானை சஹிரா வித்தியாலத்தின் பர்ஷான் மொஹமட்
- பொலன்னறுவை சிறிபுர ஆரம்ப பாடசாலையின் தெனுஜ மனுமித
- தங்காலை ஆரம்ப பாடசாலையின் தசிந்து கவிஷான்
- பண்டாரகம தேசிய பாடசாலையின் ஹினுத சஷ்மித குணதிலக
- கிழக்கு ஏருவ்வல தர்மபால மகா வித்தியாலத்தின் அகுருஸ்ஸ ஹேவகே சிஹத் சன்தினு
ஆகிய மாணவர்கள் இம்முறை 200 புள்ளிகளுக்கு 200 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.