கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண்ணொருவர் நேற்று (04) தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு இன்று (04) கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண் சுமார் ஓரு மாதத்திற்கும் அதிகமாக வீட்டில் நோய் நிலைமையினால் பீடிக்கப்பட்டு இருந்ததுடன் நீண்டகால நோயினால் அவர் பீடிக்கப்பட்டு இருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மேலும், covid-19 தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் 24 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய நபர் ஒருவர் வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (03) உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த நபரின் மரணம் covid-19 தொற்று காரணமாக ஏற்படாத காரணத்தினால் அதனை கொவிட் 19 மரணமாக கருத முடியாது என சுகாதார சேவை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.