கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் பொருட் தொழில் மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்ற  ஓஷன்வியூ  பிரைவட் லிமிடட்டினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற ஹோமாகம, கஹதுடுவ பசுமை வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் பொருட் தொழில் மேம்பாட்டு    மற்றும்  இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் தலைமையின் கீழ் நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் அழைப்பின் பேரில் போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே மற்றும் வர்த்தக அமைச்சர் டொக்டர் பந்துல குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

5 மாடிகளைக் கொண்ட 4 கட்டிடங்களில் 80 வீடுகள் இங்கு கட்டப்படவுள்ளன. ஒரு கட்டிடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய 2 படுக்கையறைகளைக் கொண்ட 10 வீடுகள் மற்றும் 3 படுக்கையறைகளைக் கொண்ட வீட்டுத் தொகுதிகள்10 இனை உள்ளடக்கியுள்ளது.

அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான செளபாக்கியத்தின் நோக்கு " ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வசதியான வீடு" என்ற தொனிப் பொருளின் அடிப்படையில் இந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மகிந்த ராஜபக்‌ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

ஊடகப்பிரிவுகருத்துரையிடுக

Blogger இயக்குவது.