வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ந்தும் கடும் மழையுடன், கூடிய காற்றும் வீசுவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில்விடத்தல் தீவு மக்கள் பாதுகாப்பான இடங்களில் அமர்த்தப்பட்டுள்ளனர். வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ் மாவட்டங்களில் இன்று மழை பெய்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக ஊடக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ,கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவின் கோணாவில் மற்றும் ஸ்கந்தபுரம் பகுதிகளில் மழையுடனான பலத்த காற்றினால் மரங்கள் முறிந்ததுடன் வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 10 இற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் 5 இற்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

இதேபோன்று விவசாய வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த பாதிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு கவனம் செலுத்தியுள்ளது.





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.