அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு விசேட ஆணைக்குழுவை நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், உயர்நீதிமன்ற நீதியரசர் தம்மிக பிரியந்த சமரகோன், கேமா குமுதினி விக்கிரமசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர் ரத்னபிரிய குருசிங்க ஆகியோர் அடங்களாக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், ராஜித சேனாரத்ன ஆகியோர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரிவாக பரிசீலனை செய்து அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதி உச்ச பட்ச தண்டனை குறித்தும் தீர்ப்பளிக்க உள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.