அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

2021.01.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. நிலக்கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுடன் இணைந்து நிலக்கண்ணிவெடியகற்றும் மனிதநேய நிகழ்ச்சித்திட்டத்தை மேற்கொள்ளல்

இலங்கையில் 2002 ஆம் ஆண்டிலிருந்து நிலக்கண்ணிவெடி அகற்றும் மனிதநேயப் பணிகள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளில் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் 02 உம் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் 02 உம் பங்கெடுக்கின்றன. மேலும் இலங்கை இராணுவத்தினரின் நிலக்கண்ணிவெடி அகற்றும் பிரிவும் குறித்த பணிகளில் ஈடுபடுகின்றன. நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளின் மேற்படி நிறுவனங்களைக் கண்காணித்தல் மற்றும் தேசிய நிலக்கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டு நிலையத்தால் மேற்கொள்ளப்படுகின்றது. இதுவரை 197.66 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 15.39 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் அகற்றப்பட வேண்டியுள்ளது. இச்செயன்முறை தொடர்பாக தேசிய நிலக்கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டு நிலையம், நிலக்கண்ணிவெடி அகற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதுடன், 2023 ஆம் ஆண்டிற்கான குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அதிகாரசபை அமைச்சராக பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இராஜதந்திர, விசேட, சேவைகள் மற்றும் உத்தியோகபூர்வ பயணக் கடவுச்சீட்டுக்குரிய நபர்களுக்கு வீசா பெற்றுக் கொள்வதன் மூலம் பரஸ்பர நோக்கில் விடுவிப்பதற்கு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் ஓமான் சுல்தான் அரசுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் ஓமான் சுல்தான் அரசு பிரஜைகளுக்கு குறித்த ஏனைய நாடுகளுக்கு பரஸ்பர நோக்கில் போக்குவரத்துக்கு வசதியளித்தல் மற்றும் இரு நாடுகளுக்குமிடையில் நட்பு ரீதியான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இராஜதந்திர, விசேட, சேவைகள் மற்றும் உத்தியோகபூர்வ பயணக் கடவுச்சீட்டுக்குரிய நபர்களுக்கு வீசா பெற்றுக் கொள்வதன் மூலம் பரஸ்பர நோக்கில் விடுவிப்பதற்கு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் ஓமான் சுல்தான் அரசுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எட்டுவதற்கு நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. கொவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள நிலைமையால்; தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல் தொடர்பாக உடன்பாடு தெரிவித்த காலப்பகுதியை நீடித்தல்

கொவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள நிலைமையால்; தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல் தொடர்பாக தொழில் வழங்குனர்கள், தொழிற் சங்கங்கள், தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபை, தொழில் உறவுகள் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிறுவப்பட்டுள்ள செயலணிக் கூட்டத்தில், ஊழியர்களை தொழிலிருந்து நீக்காமல் இருத்தல், அனைத்து ஊழியர்களும் தொழலில் ஈடுபடுவதற்கு சமமான வாய்ப்பு வழங்கல், ஊழியர்கள் வீட்டில் தங்கியிருக்க நேரிட்டால் இறுதியாக செலுத்தப்பட்ட மாதாந்த மொத்தச் சம்பளத்தின் அடிப்படைச் சம்பளத்தின் 50% வீதம் அல்லது ரூபா 14,500 இரண்டிலும் மிகவும் நன்மையான தொகையை செலுத்தலும், குறித்த சம்பளத்திற்கு தொழில் வழங்குனர் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கும் பங்களிப்பு செய்தல் போன்றவற்றை 2020 ஆம் ஆண்டு திசம்பர் 31 ஆம் திகதிவரை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றால் சன நடமாட்டம் மற்றும் விமானப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் சுற்றுலாத்துறை பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளமையைக் கருத்தில் கொண்டு, குறித்த துறையின் ஏற்புடைய நிறுவனங்களுக்கும் கொவிட் 19 தொற்று நிலைமையால் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்வதற்கு இயலாமல் போன் ஏனைய துறைகளைச் சார்ந்த நிறுவனங்களுக்கு மேற்படி சலுகைகளை 2021 மார்ச்சு மாதம் இறுதி வரை நீடிப்பதற்காக தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவையின் உடன்பாட்டை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

04. தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்காக கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் காணி ஒதுக்குதல்

தற்போது காணப்படும் பாடசாலைகளில் 07 மாவட்டங்களில் காணப்படும் தோட்டப் பாடசாலைகள் 354 இனை மேம்படுத்துவதற்காக குறித்த பாடசாலைகளுக்கு அண்மையிலுள்ள தோட்டக் கம்பனிகளின் நிர்வாகத்திலுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான தோட்டங்களில் குறைந்த பயன்பாட்டைக் கொண்ட காணிகளில் 02 ஏக்கர் உயர்ந்தபட்ச காணியை ஒதுக்கி வழங்குவதற்கு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. குறித்த பாடசாலைகளுக்கு அப்பால் மேலும் 491 பாடசாலைகள் காணப்படுவதுடன், குறித்த பாடசாலைகளின் தேவைகளுக்கமைய 02 ஏக்கர் உயர்ந்தபட்ச காணி ஒதுக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, குறித்த பாடசாலைகளுக்கு தோட்டக் கம்பனிகளின் நிர்வாகத்தின் கீழுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான தோட்டங்களில் காணிகளை ஒதுக்குவதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. 'இலங்கையில் ஆரம்ப சுகாதார சேவைகளை நடைமுறைப்படுத்தும் பொறிமுறையில் குருதியழுத்தத்தைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான பல்துறை தலையீடுகள்' எனும் பெயரிலான ஆய்வுக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

நாளொன்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேலதிகமாக உட்கொள்ளும் உப்பு பாவனையால் குருதியழுத்தம் உள்ளிட்ட இருதய நோய்கள் (Cardiovascular disesses) ஏற்படுகின்றன. ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்கும் போது இருதய நோய்களைக் கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்தலுக்காக இலங்கை தற்போது WHO-PEN பக்கேஜ் பயன்படுத்துவதுடன், குறித்த பக்கேஜின் விரிவாக்கமாக அண்மையில் உலக சுகாதார தாபனத்தால் HEARTS பக்கேஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பக்கேஜ் இற்கு மாறும் போது குருதியழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்காக தரநியமங்களைப் பயன்படுத்தல், தேவையான தொழிநுட்பங்களை மேம்படுத்தல், சிகிச்சையளித்தல் போன்றவற்றுக்காக விசேடமான ஒழுங்குவிதிகளைத் தயாரித்தல், பணியாளர்களைப் பயிற்றுவித்தல், பயிற்சி வழிகாட்டிகளைத் தயாரித்தல், சுகாதாரத் தகவல் தொகுதியை காலத்தோடு தழுவியதாக மேம்படுத்தல், மற்றும் வீட்டில் உப்புப் பாவனையைக் குறைப்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் தேவையான அறிவு வழங்கல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்குத் தேவையான நிதி ஆய்வு நிதியனுசரணையாக சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமான Resolve to Save Lives எனும் நிறுவனத்திடமிருந்த பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், குறித்த நிதியனுசரணையின் கீழ் குறித்த ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏவையட Vital Strategies எனும் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கமைய, 'இலங்கையில் ஆரம்ப சுகாதார சேவைகளை நடைமுறைப்படுத்தும் பொறிமுறையில் குருதியழுத்தத்தைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான பல்துறை தலையீடுகள்' எனும் ஆய்வுக் கருத்திட்டத்தை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. 1979 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

1979 ம் ஆண்டு 40 ஆம் இலக்க ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய காலணி ஏற்றுமதிக்கான செஸ் வரி திருத்தம் செய்வதற்காக 2020 ம் ஆண்டு அக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த வர்த்தமானி அறிவித்தலின் கீழுள்ள ஏற்பாடுகளை மேலும் திருத்தம் செய்வதற்காகவும் மேலும் சில பொருட்களுக்கான செஸ் வரி திருத்தம் செய்வதற்கும் 2020 ம் ஆண்டு அக்ரோபர் மாதம் 29 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்காக வர்த்தகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இலங்கையில் வாகன உற்பத்தி, பொருத்துதல் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தி தொடர்பாக தரநியம நடவடிக்கை நடைமுறைகள் (Standard operating procedures )

உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மோட்டார் வாகன உற்பத்தியை இலங்கையில் அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதுடன், அதற்காக தற்போது நடைமுறயிலுள்ள சட்ட ஒழுங்குகள் மற்றும் பொறிமுறைகள் பற்றி தெளிவான வழிகாட்டல் அவசியமாகவுள்ளது. அதற்கமைய மோட்டார் வாகன உற்பத்திக்கு ஏற்புடைய நடைமுறைகள் தொடர்பாக ஆழமாக ஆராயப்பட்டு குறித்த அரச நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியளர்களின் உடன்பாடுகளுடன் நிபுணத்துவர்களின் பங்களிப்புடன் ' உள்ளுர் பெறுமதிசேர் சூத்திரம் மற்றும் ஏற்பாடுகள் உள்ளடங்கிய முன்மொழியப்பட்ட தரநியம நடவடிக்கை நடைமுறைகள்' தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த நடைமுறைகளின் உள்ளடக்க ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. வரையறுக்கப்பட்ட பெல்வத்த பால் உற்பத்தி நிறுவனத்துக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் காணி வழங்கல்.

புத்தல பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான 22 ஹெக்றயர் காணித்துண்டை வரையறுக்கப்பட்ட பெல்வத்த பால் உற்பத்தி நிறுவனத்துக்கு 30 வருடகால நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்குவதற்கு காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. தேங்காய்ச் சொட்டு சார்ந்த உற்பத்திகளுக்காக குளிரூட்டப்பட்ட தேங்காய்ச் சொட்டு இறக்குமதி செய்தல்

தேங்காய்ச் சொட்டு சார்ந்த உற்பத்திகளுக்காக உள்ளு தெங்கு உற்பத்தி விநியோகம் போதுமானதாக இன்மையால் சில நிபந்தனைகளின் கீழ், தேங்காய்; சொட்டு இறக்குமதிக்காக 2017 திசெம்பர் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய 8 மாத காலப்பகுகுதியில் 2542 மெற்றிக்டொன் தேங்காய்ச் சொட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வருடம் 250 மில்லியன் தெங்கு உற்பத்தி பற்றாக்குறை நிலவும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால் தொடர்ச்சியாக நான்கு மாதங்களில் இரண்டு மாதங்களுக்கொருமுறை தெங்கு உற்பத்தி 400 மில்லியன்களுக்கு குறைவாக நிலவுமாயின் இதற்கு முன்னர் காணப்படும் ஏற்புடைய நிபந்தனைகளின் கீழ் உள்ளுர் தேங்காய்ச் சொட்டு சார்ந்த உற்பத்திகளுக்கு தேங்காய்ச் சொட்டு இறக்குமதிக்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. சீனாவில் இணையத்தளம் அல்லது இணையத்தளம் அல்லாத வழிமூலம் (online or offline platform) தூய்மையான சிலோன் தேயிலை (Pure Ceylon Tea) விற்பனை செய்தல்

முக்கியமாக தேயிலை இறக்குமதி ஏற்றுமதி பாதுகாப்பின் போது இணையத்தள வாயிலாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெனி ரீ இன்டஸ்றீ கம்பனி லிமிடட் இன் நிர்;வாகக் கம்பனியான சீனாவின் பூஜியான் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஸ்டார் சைனா இன்டர்நெஷனல் ரேட் கம்பனி லிமிடட் ( Fujian Star China International Trade Company Ltd ) மற்றும் இலங்கை தேயிலைச் சபைக்குமிடையே இணையத்தளம் அல்லது இணையத்தளம் அல்லாத வழிமூலம் (online or offline platform) தூய்மையான சிலோன் தேயிலை (Pure Ceylon Tea) விற்பனை செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கை தேயிலை சீனாவில் சம்பிரதாய முறையாக விநியோகிப்பதற்கு அப்பால் இலங்கை தேயிலை வரத்தகக் குறியீட்டை இணையத்தளம் மூலமாக ஊக்குவிப்பதற்கு, விற்பனை செய்வதற்காக சீனாவில் களஞ்சியப்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்குமான வலையமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 5G இணைய விற்பனை தளத்தை நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் குறித்த நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய சீனா தேயிலைச் சந்தையில் நிலவும் வாய்ப்புக்களை பயன்படுத்தி இணையத்தளம் மற்றும் இணையத்தளம் அல்லாத தளங்கள் மூலமாக தூய்மையான சிலோன் தேயிலையை விற்பனை செய்வதற்காக இலங்கை தேயிலை சபை மற்றும் ஸ்டார் சைனா இன்டர்நெஷனல் ரேட் கம்பனி லிமிடட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 1971 ஆம் ஆண்டு 45ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நடைமுறையிலுள்ள நட்டஈட்டு சூத்திரத்தின் உயர்ந்தபட்ச நட்டஈட்டை திருத்தம் செய்தல்

2003 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள 1971 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் தொழிலாளர்களின் சேவையை முடிவுறுத்தும் போது சலுகை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தொழிலாளர்களின் சேவையை முடிவுறுத்தும் போது அவர்களுக்கு செலுத்த வேண்டிய நட்டஈட்டுத் தொகை தீர்மானிப்பதற்கான சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய தொழில் உறவுகள் அமைச்சரால் கொண்டுவரப்பட்ட ஒழுங்குவிதிகளை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்கள் பணிபுரிந்த காலத்தை கருத்தில் கொண்டு நட்டஈடு தீர்மானிக்கப்படும். அவ்வாறாயினும் குறித்த சூத்திரத்துக்கமைய கணிப்பிடும் போது ரூபா 1,250, 000 இற்க அதிகரிக்கப்படாத ஏற்பாட்டுக்கு குறித்த ஒழுங்குவிதிகளில் உள்வாங்கப்பட்டிருப்பதால் நியாயமற்ற வகையில் தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படும் போதும் நிறுவனம் மூடப்பபடுவதால் தொழிலை இழக்கும் போது உயர் சம்பளத்தை பெறும் பணியாளர்களுக்கு கிடைக்கும் நட்டஈடு குறைவாக இருக்கின்றமை தெரியவந்துள்ளது. குறித்த விடயத்தை கவனத்தில் கொண்டு செலுத்தப்படவேண்டிய உயர்ந்தபட்ச நட்டஈட்டுத் தொகையை ரூபா 1,250,000 இலிருந்து ரூபா 2,500,000 தொழில் உறவுகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. 1950ஆம் ஆண்டு 9ஆம் இலக்க காணி எடுத்தல் சட்டத்தை திருத்தம் செய்தல்.

தற்போதுள்ள 1950ஆம் ஆண்டு 9ஆம் இலக்க காணி எடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளை பின்பற்றும் போது அதிக காலம் எடுப்பதால் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு துரித அபிவிருத்திகளுக்கு தடையாக அமையும். குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்தி எடுக்கப்படும் காணிகளுக்காக இழப்பீடு செலுத்தும் போது கூட்டு பொறிமுறையை பின்பற்றாமை மற்றும் இழப்பீடுகளை செலுத்தவதற்காக அதிக காலம் செலவிடப்படல் போன்ற விடயங்கள் அவற்றில் முக்கியமாக அமையும். அதனால் காணி எடுத்தல் செயன்முறைக்காக செலவிடும் காலத்தை குறைத்து இலகுவான பொறிமுறையின் கீழ் காணி எடுத்தலை மேற்கொள்ளவும், கூட்டு பொறிமுறையின் கீழ் இழப்பீட்டை செலுத்துவதற்கு இயலுமான வரையில், குறித்த சட்டத்தை சமகால தேவைகளுக்கு பொருத்தமான வகையில் திருத்தம் செய்வதற்கும் காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. 1957ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க தேயிலை கட்டுப்பாட்டுச் சட்டம் திருத்தம் செய்தல்

1957ஆம் ஆண்டு 51ஆம் இலக்க தேயிலை கட்டுப்பாட்டுச் சட்டம் திருத்தம் செய்வதற்காக 2016 மே மாதம் 10ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய சட்ட வரைஞரால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சட்டமூலத்தை மேலும் கீழ் காணும் வகையில் ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டு திருத்தம் செய்வதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செயன்முறையில் வகை பிரிப்பு செய்த பின்னர் அகற்றப்படும் தேயிலைக்கு ' மீள்பதனிடப்பட்ட தேயிலை ' எனும் வரைவிலக்கணத்தை குறித்த சட்டத்தில் உள்வாங்குதல்.

• மீள் பதனிடப்பட்ட தேயிலையில் மேலும் தேயிலை வகைபிரிக்கப்பட்ட பின்னர் எஞ்சும் பகுதி ' நிராகரிக்கப்பட்ட தேயிலை ' என பெயரிடல்.

• தேயிலை பதனிடலாளர்களை பதிவுசெய்தல், அவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குதல் மற்றும் நிர்வகித்தல் உள்ளிட்ட அவர்களுக்கு ஏற்புடையை சட்ட வரையறைகளை குறித்த சட்டத்தில் உள்வாங்குதல்.

14. குடும்பச் சட்டம்

திருமணம், விவாகரத்து, பிரிவு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகள் 1907ஆம் ஆண்டு 19ம் இலக்க திருமணம் பதிவு செய்தல் கட்டளைச் சட்டம் மற்றும் குடியியல் வழக்கு சட்டக்கோவையில் உள்வாங்கப்பட்டுள்ளது. குறித்த கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் சமகாலத்துக்கு பொருத்தமான வகையில் திருத்தம் செய்வதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய குடும்பச் சட்டம் தொடர்பாக வேறு நாடுகளில் நடைமுறையிலுள்ள சட்ட நிலைமைகள் பற்றி குறித்த விடயம் சார்ந்த நிபுணத்துவக் குழுவின் மூலம் ஆய்வுகற்கைகளை மேற்கொண்டு விவாகரத்து, திருமண முடிவுறுத்தல், பிரிவு, விவாகரத்துக் கொடுப்பனவு, பிள்ளைகளின் பொறுப்பு மற்றும் சொத்துக்கள் பகிர்தல் போன்ற அனைத்து துறைகளுக்குமான குடும்பச் சட்டத்தின் சட்டமூலத்துக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. குற்றச்செயலின் போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டத்தை திருத்தம் செய்தல்.

2015ஆம் ஆண்டு 4ஆம் இலக்க குற்றச்செயலின் போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு பல நன்மைகள் உரித்தாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் குறித்த சட்டத்தின் 10ஆம் உறுப்புரையின் கீழ் பிணை மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியதுடன், அதனால் சந்தேக நபர்களும் குற்றவாளிகளும் பல அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பில் அமைந்துள்ளதால் தொலைதூரங்களில் வசிக்கும் சந்தேகநபர்களுக்கு குறித்த பிணை மனுவை சமர்ப்பிப்பதற்கு பல சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதால் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குப் பதிலாக பிணை வழங்குவதற்கு மேல் நீதிமன்றங்களை திருத்தம் செய்வது உகந்தது என தெரியவந்துள்ளது. அவ்வாறே ' வழக்கு நடவடிக்கைகள் முடிவுறும்வரை சந்தேக நபர் தடுப்புக்காவலில் வைத்திருக்க வேண்டும் ' எனும் ஏற்பாடு 'நீதிமன்றத்தால் நியாயம் என கருதும் காலம் வரை தடுப்புக் காவலில் வைத்தல்' என திருத்தம் செயவது பொருத்தம் என கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய குற்றச்செயலின் போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. இலங்கைப் போக்குவரத்து சபைக்கு புதிய 200 பேரூந்துகள் கொள்வனவு செய்தல்

கொழும்பு மற்றும் நெரிசல் மிகுந்த நகர்ப்பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்து சேவை மற்றும் வாகனங்களைத் தரித்து வைக்கக்கூடிய வசதிகளுடன் கூடியதாக ஆரம்பிப்பதற்கு வாகன ஒழுங்குபடுத்தல்கள், பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரத பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன உற்பத்தி இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளதுடன், அதற்காக தற்போது காணப்படும் பேரூந்துகளை விட மேலும் சொகுசு வசதிகளுடன் கூடிய குறுந்தூரப் போக்குவரத்து போக்குவரத்துக்குப் பொருத்தமான 200 பேரூந்துகள் கொள்வனவு செய்ய வேண்டிய தேவையுள்ளது. அதற்கமைய, அங்கீகாரம் பெற்ற உள்ளுர் கம்பனி மூலம் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளுர் போட்டிப் விலைமுறிக்கோரலைப் பின்பற்றி, உயர்;ந்த ரக புதிய 200 பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. விக்டோரியா மின்னுற்பத்தி நிலையத்தின் அலகு 01 மற்றும் 02 இற்கான மின்னுற்பத்தி இயந்திரங்கள் (Generator Stators) இரண்டு (02) திட்டமிடல், கொள்வனவு செய்தல், பரிசோதித்தல், பொருத்துதல் கண்காணிப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல்

70 மெகாவாற்றுடன் 03 அலகுகளுடன் கூடிய விக்டோரியா மின்னுற்பத்தி நிலையம் 1984 ஆம் ஆண்டு 210 மெகாவாற்று இயலளவுடன் கூடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 வருடகாலத்திற்கு குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாட்டை உறுதி செய்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நவீனமயப்படுத்தல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக தொழிநுட்பக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழு மின்னுற்பத்தி நிலையத்தின் அலகு 01 மற்றும் 02 இற்கான மின்னுற்பத்தி இயந்திரங்கள் (Generator Stators) இரண்டு (02) இனை பொருத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளத. அதற்கமைய, குறித்த பணிக்கான பெறுகைச் செயன்முறைப் பின்பற்றி பொருத்தமான நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. பிரிவென அபிவிருத்தி நிதியச் சட்டத்தை நிறுவுதல்

பிரிவெனாக் கல்விக்காக வருடாந்தம் 4,500 மில்லியன் ரூபாய்களை அரசாங்கம் ஒதுக்குகின்றது. சமகாலத்தில் தலைமைப் பிரிவெனா, அடிப்படை பிரிவெனா, கலாசாலை பிரிவெனா, இருமொழி பிரிவெனா, விசேட பிரிவெனா, மற்றும் பௌத்த சீலமாதா கல்வி நிறுவனம் என பிரிவெனாக்கள் வகைப்பிரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நிறுவனங்களில் 62,240 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். பிரிவெனாக் கல்வியை மிகவும் முறைப்படுத்தி கொண்டு நடாத்துவதற்கு இயலுமான வகையில் பிரிவெனா அபிவிருத்தி நிதியம் எனும் பெயரில் நிதியத்தை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. குடிநீரிலுள்ள நச்சுப் பதார்த்தங்களை அகற்றுவதற்காக ஆய்வுக் கருத்திட்டத்திற்காக ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

ஐக்கிய இராச்சியத்தின் நுண்ணுயிர் தொழிநுட்பம் மற்றும் நுண்ணுயிரியல் விஞ்ஞான ஆய்வுப் பேரவை மூலம் நிதியனுசரணை வழங்கும் ஆய்வுக் கருத்திட்டத்திற்கு ஏற்புடையதாக ஐக்கிய இராச்சியத்தின் றொபட் ஹோர்டன் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கைப் பேராதெனிய பல்கலைக் கழகமும் இணைந்து ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய முன்மொழியப்பட்ட கருத்திட்டத்தின் மூலம் இலங்கையில் காணப்படும் சிறுநீரக நோய்க்குக் காரணமாக அமையும் நீர் மூலங்கள் மாசடைந்தமையால் வளர்ச்சியடைந்த நீலப்பசுமை பாசி மூலம் வெளியிடப்படும் அதிக நச்சுத்தன்மையான Cyanotoxin எனும் இரசயானப் பதார்தத்தை அகற்றுவதற்கு இயற்கை உயிரினங்களைப் பயன்படுத்தி பாதிப்புக் குறைந்த சுகாதாரப் பாதுகாப்பான நுண்ணுயிர் தீர்வைக் கண்டறிவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த கருத்திட்டத்திற்காக ஐக்கிய இராச்சியத்தின் நுண்ணுயிரியல் விஞ்ஞான ஆய்வுப் பேரவை மூலம் 0.3 மில்லியன் பவுண்களைப் பெற்றுத்தருவதற்கு முன்மொழியப்பட்டுள்ளத. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஐக்கிய இராச்சியத்தின் றொபட் ஹோர்டன் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கைப் பேராதெனிய பல்கலைக் கழகம் மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகமும் இணைந்து ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. முன்நிரப்பப்பட்டுள்ள எனக்ஸொபாரின் சோடியம் ஊசிமருந்து 6000 ஐயூ, 0.6 மில்லி லீற்றர் சிரின்ஜர்கள் 1,000,000 விநியோகிப்பதற்கான விலைமனுக் கோரல்

இருதய நோயாளர்களின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் எனக்ஸொபாரின் சோடியம் எனும் மருந்தின் விலைமனுக் கோரலுக்காக சர்வதேச போட்டி முறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின பரிந்துரைக்கமைய, முன்நிரப்பப்பட்டுள்ள எனக்ஸொபாரின் சோடியம் ஊசிமருந்து 6000 ஐயூ, 0.6 மில்லி லீற்றர் சிரின்ஜர்கள் 1,000,000 விநியோகிப்பதற்கான விலைமனுக் கோரல் மருத்துவ விநியோகப் பிரிவின் மூலம் வரவழைத்து வழங்குவதற்கான மொத்தச் செலவு 695 மில்லியன் இலங்கை ரூபாய்களுக்கு Ms. Slim Pharmaceuticals (pvt) Ltd இற்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. ஹியூமன் அல்பியுமின் சொலியுஷன் பீபிஃபீயூவி ஈயு ஆர், 20% மில்லி லீற்றர் 50 போத்தல்கள் 300,000 விநியோகிப்பதற்கான பெறுகை

சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் இம்மருந்து பெறுகைக்காக சர்வதேச போட்டிமுறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய ஹியூமன் அல்பியுமின் சொலியுஷன் பீபிஃபீயூவி ஈயு ஆர், 20% மில்லி லீற்றர் 50 போத்தல்கள் 300,000 விநியோகிப்பதற்கான மொத்தச் செலவு 6.27 மில்லியன் அமெரிக்கன் டொலர்;களுக்கு இந்தியாவின் Ms. Reliance Life Science Pvt Ltd நிறுவனத்திற்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. ரேனெக்டிப்லெஸ் இன்ஜெக்ஷன் 40 மில்லிக்கிராம் (40mg) வயல்ஸ் 17,000 இனை விநியோகிப்பதற்கான விலைமனுக்கோரல்

இருதய நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் இவ் ஊசிமருந்தைப் பெறுவதற்காக சர்வதேச போட்டிமுறி கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய மொத்தச் செலவு 7.82 மில்லியன் டொலர்களுக்கு இந்தியாவின் Ms. Boehringer Ingelheim India (Pvt) Ltdஎனும் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. 'சர்வதேச சந்தையுடன் இலங்கையின் கிராமங்களை தொடர்புபடுத்தல்' கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம

நாட்டில் மக்கள் மயப்படுத்தப்பட்ட பொருளாதார அபிவிருத்திக்காக உள்ளுர் கைத்தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச சந்தையுடன் பொருத்தமான வலையமைப்பை அபிவிருத்தி செய்தல், 'சர்வதேச சந்தையுடன் இலங்கையின் கிராமங்களை தொடர்புபடுத்தல்' எனும் கருத்திட்டத்தின் நோக்கமாகும். சமுர்த்தி, வீட்டுமட்ட பொருளாதாரம், நுண்நிதி, சுயதொழில், மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சால் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் 'பொருளாதார வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - 2020' நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 'சமுர்த்தி உற்பத்திகள் தொடர்பான முன்மாதிரிக் கிராமம்' அதன் முக்கிய உப நிகழ்ச்சித்திட்டங்களில் ஒன்றாகும். குறித்த உப நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் கிராமத்தவர்களின் தரமான உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படும் உள்ளுர் கைத்தொழிலாளர்களை அடையாளங் காண்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கான நிறுவன வலையமைப்பின் மூலம் 'சர்வதேச சந்தையுடன் இலங்கையின் கிராமங்களை தொடர்புபடுத்தல்' இற்காக கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சமுர்த்தி, வீட்டுமட்ட பொருளாதாரம், நுண்நிதி, சுயதொழில், மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24. மிஹிந்தலை இராசரட்டை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையிலுள்ள காணியில் வர்த்தக நிலையத்தை அமைக்கும் கருத்திட்டம்

'சுபீட்சத்தின் நோக்கு' அரசாங்க கொள்கைப் பிரகடனத்திற்கமைய உயர்தரச் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பற்காக இடைநிலைக் காலப்பகுதிக்கான திட்டத்தை தயாரித்து வருவதுடன், குறித்த பின்னணியில் எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவர்களுக்கு மஹாபொல உயர்கல்வி மாணவர்கள் அதிகரிப்பதால் அவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் மூலம் வழங்கப்படும் நிதி வசதிகளுக்கான செலவு அதிகரிக்கும். மஹாபொல புலமைப்பரிசில் மாணவர் நிதியத்தை மேம்படுத்துவதற்கும், முதலீடுகளின் மூலம் நேரடி அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் குறித்த புலமைப்பரிசில் மாணவர் நிதியத்தை வேறு முதலீட்டு வழிகளில் முதலிடுவதற்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, அநுராதபுர மாவட்டத்தில் மிஹிந்தலை இராசரட்டை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையிலுள்ள 300 ஏக்கர் அரசாங்க காணியில் வர்த்தக நிலையத்தை அமைப்பதற்கான கருத்திட்டத்திற்காகவும், குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்புடைய ஏனைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குழுவொன்றை நியமிப்பதற்கு வர்த்தத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25. இத்தாபான – ஹொரவல – கொட்டுபொல வீதியின் இத்தாபான பிரதேசத்தில் பெந்தர ஆற்றுக்குக் குறுக்கே பாலம் அமைத்தல்

இத்தாபான – ஹொரவல – கொட்டுபொல வீதியின் இத்தாபான பிரதேசத்தில் பெந்தர ஆற்றுக்குக் குறுக்கே பாலம் அமைத்தல் மற்றும் குறித்த வீதியை புனரமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் திட்டமிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள பாலத்தின் நீளம் 160 மீற்றர்கள் ஆவதுடன், வீதியின் அகலம் 10.4 மீற்றர்களாகும். அதற்கமைய குறித்த பாலத்தை '100,000 கிலோமீற்றர் வீதிகளைப் புனரமைத்தல் கருத்திட்டத்தின்' கீழ் புனரமைப்பதற்கு பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.