ஸஹ்ரான் ஹாசிமின் பயங்கரவாத பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் மாவனெல்லை ஹிங்குல பிரதேசத்தை சேர்ந்த 24 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

ஸஹ்ரானினால் பெண்கள் சிலரை பயங்கரவாத செயற்பாட்டுக்கு இணைத்துக் கொள்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி பயங்கரவாத விசாரணை பிரிவினால் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.