ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட தீர்மானத்தை நாம் வெற்றியாக கருதவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கோவிட்19 இனால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வெற்றியாக கருதவில்லை. இது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல, அவர்கள் எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய உரிமை என்பதனை கருத்தில் கொள்ளவேண்டும். அனைத்து இலங்கையர்களுக்கும் சமத்துவத்தை மற்றும் தங்கள் உரிமையை அடைவதற்கான எங்கள் போராட்டத்தை நாம் கிடைக்கும்வரை என்றும் தொடருவோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.