பிரதம நீதியரசரின் பணிப்புரைக்கு அமைவாக  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒன்பது பேருக்கு எதிராக, கேகாலை மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒன்பது பேரும், மாவனெல்ல மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் உள்ள புத்தர் சிலைகளை சேதப்படுத்தினர் என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆவர்.

அவர்களுக்கு எதிராக ட்ரயல் அட் பார் முறையில் விசாரணைகளை முன்னெடுக்கும் வகையிலேயே கேகாலை மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நௌபர் மௌவலி, இப்ராஹிம் மௌலவி, மொஹமட் சஜிட், மொஹமட் சஹீட், சதீக் அப்துல்லா, சனூல் அப்டீன், மொஹமட் மில்ஹான் ஆகியோர் உட்பட ஒன்பது பேருக்கு எதிராகவுமே இவ்வாறு குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.