16.04.2021

அனைத்து பள்ளிவாயல்களின் நம்பிக்கை பொறுப்பாளர்களுக்கும்/நம்பிக்கையாளர்களுக்கும் மற்றும் ஏதாவதொரு பள்ளிவாயல் நிர்வாகத்துடன் ஏதாவது வகையில் தொடர்புள்ள நபர்களுக்கும்;

இலங்கை அரசாங்கம், 13.04.2021 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம். 2223/3 மூலம் இலங்கையிலுள்ள பதினொரு (11) அமைப்புகளை தடைசெய்துள்ளது. மையால், எந்தவொரு பள்ளிவாயலினதும் நம்பிக்கையாளர்/பொறுப்பாளர் அல்லது பள்ளிவாயல் நிர்வாகத்துடன் ஏதாவது வகையில் தொடர்புள்ள நபர்; குறித்த தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் ஒரு உறுப்பினர் மற்றும் / அல்லது தொடர்புபட்டவர் மற்றும் / அல்லது அவற்றின் பங்காளிகளாக இருந்தால், அவர்களை உடனடியாக இராஜினாமா செய்யும்படியும் அவர்களது நியமனக் கடிதங்களை திருப்பி ஒப்படைக்கும்படியும் இலங்கை வக்ப் சபை அவர்களை கண்டிப்பாக வேண்டிக்கொள்கிறது.

இலங்கை வக்ப் சபையின் பணிப்புரைக்கமைய.

 ஏ.பீ.எம்.  அஷ்ரப்

 பணிப்பாளர் - முஸ்லிம் பள்ளிவாயல்கள், தரும நம்பிக்கை சொத்துக்கள் அல்லது வக்புகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.