இன்று(19) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்த கருத்துக்கள்.

இன்று இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு போதும் இடம் பெறாத ஓர் விடயத்தை இந்த அரசாங்கம் முன்னெடுக்கிறது. நீதிமன்றத்திற்குரிய வழக்குகளுக்கு தீர்ப்புகளை பாராளுமன்றம் வழங்க முற்படுகிறது. இலங்கையின் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிட்டப்பட்டுள்ள விடயம். நீதிமன்ற விடயத்தில் பிற அரச நிறுவனங்கள்  தலையிட முடியாது. இங்கு தான் அதிகார வலுச் சம நிலை உள்ளது. அரசியலமைப்பிற்கு முரனாக இந்த அரசாங்கம் தமக்குள்ள பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு வழக்குகளிலிருந்து விடுதலை பெற பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. நீதிமன்ற விவகாரத்தில் எவ்வாறு பாராளுமன்றம் தலையிட முடியும்? 45 வருட பாராளுமன்ற வரலாற்றில் இது தான் முதல் முறை. குற்றவியல் வழக்குகள் இருக்குகின்றன. இவைகளிலிருந்து விடிவுப்பதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரமுள்ளதா?

ஏன் நீதிமன்ற வழக்குகளிலிருந்து இவ்வாறான ஏறபாடுகள் மூலம் விடுவித்துக் கொள்ள முற்படுகின்றனர். இன்னும் தீர்வு கானப்படாத நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய  முக்கிய வழக்குகள் இதில் அடங்கியுள்ளது. திவிநொகும சட்ட மூல வழக்கு, யுனைடட் ஸ்போர்ட் வழக்கு, கால்டன் ஸ்போர்ட்ஸ்,தாருன்ய ஹெடக் விவகார வழக்கு, துமிந்த சில்வா,வசீம் தாஜுதீன் வழக்கு,பிரகனீத் எக்னெலிகொட வழக்கு,லசந்த விக்ரமதுங்க வழக்கு, ரக்னா லங்கா, வித்யா படுகொலை வழக்கு, ஜோசப் பரராஜ சிங்கம் வழக்கு,மற்றும் ரொஹித,கம்பன்பில பேன்றவர்களின் வழக்குகளை விடுவிக்க முற்படுகின்றனர். இதற்காக பாராளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

ஏன் இத்தகைய வழக்குகளிலிருந்து இத்தகைய ஏற்பாடுகள் மூலம் விலகிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். நீதிமன்ற சுயாதீன விசாரணைகளுக்கு ஏன் பயம். எதை மறைக்க முற்படுகின்றனர் என்று கேள்வி எழுப்பினார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.