ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் உறுப்புரிமை பலவந்தமாக பறிக்கப்பட்டதாக கூறி எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (08) எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் உரையின் போது அமைச்சர் சமல் ராஜபக்ச குறுக்கீடு செய்ததனை தொடர்ந்து பெரும் எதிர்ப்பு எழுந்தது. அதனை தொடர்ந்து சபை ஐந்து நிமிடங்கள் சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசன வெற்றிடத்திற்கு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜித் மானப்பெருமவின் பெயர் வர்த்தமானியில் வௌியிடப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் வெற்றிடமாகிமாகியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

பாராளுமன்ற அமர்வு நேற்று (07) காலை ஆரம்பமான போது சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன சபையில் இதனை அறிவித்திருந்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.