700 வருடங்கள் பழைமைவாய்ந்த தர்வேஷ் முஹ்யித்தீன் வலியுல்லாஹ் ஸியாரம்

தொகுப்பு - இப்ஹாம் நவாஸ்

பலாங்கொடை தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் அருகில் தர்வேஷ் முஹிய்யித்தீன் வலிய்யுல்லாஹ் அவர்களின் ஸியாரம் அமைந்துள்ளது.   1922ஆம் ஆண்டு தப்தர் ஜெய்லானியில் பள்ளிவாசல் ஒன்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது, தர்வேஷ் முஹிய்யித்தீன் வலிய்யுல்லாஹ் அவர்களின் மக்பரா மீதிருந்த மீஸான் கல் (Tomb Stone) கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ‘தர்வேஷ் முஹியித்தீன்’ என்ற பெயர் எழுதப்பட்டிருந்ததுடன், அதில் ஹிஜ்ரி 715 

(அதாவது கி.பி.1322) என்ற ஆண்டும் பதிக்கப்பட்டிருந்து. ‘தர்வேஷ் முஹியித்தீன்’ என்பது ‘முஹியித்தீனின் சீடர்’ என்பதைக் குறிக்கும். ஹிஜ்ரி 715 என்பது , அஷ்செய்க் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் வபாத்தின் பின்னர்  154வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அஷ்செய்க் அப்துல் காதிர் ஜெய்லானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட காதிரிய்யா சூபி வழியமைப்பைச் சேர்ந்த அவரது சீடர் ஒருவரே தப்தர் ஜெய்லானிக்கு விஜயம் செய்து, அங்கு வபாத்தாகி அவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டார் என நம்பப்படுகின்றது. மேற்குறிப்பிடப்பட்ட மீஸான் கல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, ஹிஜ்ரி 300  (கி.பி. 913) இற்குரிய ‘யா அல்லாஹ்’ என்று எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று தப்தர் ஜெய்லானியில் காணப்பட்டதோடு, 2014 தொல்பொருளியல் திணைக்களத்தால் சட்டவிரோத கட்டிடங்களை அகற்றும் பணியின் போது, அகற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. எனவே,  தப்தர் ஜெய்லானி போன்ற எமது இருப்பியலுக்கு ஆதாரமாகவுள்ள இடங்களை பாதுகாப்பது 

எம் அனைவரினதும் கடமையாகும்.

படம் 1 -  ‘தர்வேஷ் முஹியித்தீன்’ என்று எழுதப்பட்ட கல்வெட்டு (மீதான் கல்)

படம் 2-  தர்வேஷ் முஹியித்தீன் வலிய்யுல்லாஹ் அவர்களின் ஸியாரம்

படம் 3 - ‘யா அல்லாஹ்’ என்று எழுதப்பட்ட ஹிஜ்ரி 300இற்குரிய கல்வெட்டு

தப்தர் ஜெய்லானி தொடர்பான விரிவான கட்டுரை மற்றும் காணொளியை கீழுள்ள லிங்கில் பார்வையிட முடியும்.

தப்தர் ஜெய்லானி : தப்தர் ஜெய்லானி மலைக்குகைப் பள்ளிவாசலின் வரலாற்றுப் பின்னணி இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தின்...

Posted by Ifham Nawas on Friday, April 10, 2020


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.