சுற்றளவின் அடிப்படையில் தேங்காயின் அதிகபட்ச விலை நிர்ணயம் குறித்த அதி விசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டு புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (18) இதனை வெளியிட்டுள்ளது.

2020 செப்டம்பர் 25 திகதியன்று வெளியிடப்பட்ட 2194/73 எனும் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய தேங்காயின் அதிகபட்ச சில்லறை விலை சுற்றளவின் அடிப்படையில் ரூபா 60 முதல் ரூ. 70 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

Coconut Gazette new

அந்த அறிவிப்பு தற்போது இரத்து செய்யப்பட்டு புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.