இலங்கையில் உள்ள மீரான் பள்ளி அல்லது மீராப் பள்ளிவாசல்கள் - பஸ்ஹான் நவாஸ்இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் மீரா பள்ளிவாசல்கள், அல்லது மீரான் பள்ளிவாசல்கள் இருப்பதை அவதானித்திருப்பீர்கள். இதில் கண்டி மீரா மக்கம் பள்ளிவாசல் (Kandy Meera Maccam Masjidh) பிரதானமானதாகும். 

இலங்கையின் பல பகுதிகளிலும் மீரா என்ற பெயரில் பாடசாலைகளும் இயங்கிவருகின்றன. 

16ம் நூற்றாண்டின் தென் இந்தியாவில் வாழ்ந்த சிந்தனையாரும், மெய்ஞானியும், போர்த்துகேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டவீரரும், அறிஞருமான நாகூர் ஸாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் றஹ்மதுல்லாஹ் அவர்களின் செல்வாக்கே இதற்கான காரணமாகும்.நாகூர் ஸாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் 404 பக்கீர்களைக் கொண்ட படையொன்று போர்க்கேயர்களுக்கு எதிராகப் போராடியது. இவர்களில் முக்கியமான ஒருவராக ஸதக் மரிக்கார் காணப்படுகின்றார்கள்.

 போரத்துக்கேயருக்கு எதிரான யுத்தம் ஒன்றில் ஸதக் மரிக்காரின் படை, போர்த்துக்கேயரின் கப்பல்களை தீயிட்டுக் கொழுத்தியது.

கேரளாவின் ஸமோரின் கடற்பைடத் தளபதியான குஞ்ஞாலி மரிக்காரும் இவர்களின் மாணவர் ஆவார். இலங்கையின் சீதாவக்கை இராச்சியத்தின் அரசன் மாயதுன்னைக்கும்,

நாகூர் ஸாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் வலியுல்லாஹ் அவர்களுக்கும் தொடர்புகள் இருந்தது. மார்க்க பிரச்சார பணிக்காக நாகூர் ஸாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் வலியுல்லாஹ் அவர்கள் இலங்கைக்கு வந்தார்கள். 

அவர்கள் இலங்கையின் கல்முனை,கண்டி,மாத்தறை,தப்தர் ஜெய்லானி போன்ற பல இடங்களுக்கு விஜயம் செய்தார்கள். 

இலங்கையின் பல இடங்களில் மீராப் பள்ளி அல்லது மீரான் என்ற பெயரில் பள்ளிவாசல்கள் காணப்படுவதற்கு, நாகூர் ஸாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் செல்வாக்கே காரணமாகும்.

நாகூர் ஸாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் மாணவர்கள் மூவர் இலங்கையில் அடங்கப் பெற்றறுள்ளனர்.

1. குஞ்சாலி மரிக்கார் (றஹ்)

கேரளாவின் சமோரீன் இராச்சியத்தின் கடற்படைத் தளபதியான இவர்கள், இலங்கையின் சீத்தாவக்கை மன்னின் அழைப்பேரில் இலங்கை வந்து போர்த்துக்கேயருக்கு எதிராக

போராடி சஹீதாக்கப்பட்டு தற்போது சிலாபம் மலே பள்ளிவாசலில் அடங்கப் பெற்றுள்ளார்கள்.

2. சிஹாப்தீன் வலீயுல்லா

நாகூர் ஸாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் இலங்கை மாணவர் ஆவார்கள். மீரான் ஸாஹிப் வலியுல்லாஹ் இலங்கையில் கண்டிக்கு விஜயம் செய்த போது,

இவர்களுடன் தங்கியிருந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த இடத்தில்தான் கண்டி மீரா மகாம் பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளதுடன், சிஹாப்தீன் வலீயுல்லா அவர்கள்

கண்டி மீரான் மகாம் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். நாகூர் ஸாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் வலியுல்லாஹ் அவர்களின நினைவாகவே,

மீரான் மகாம் என்ற பெயர் இப்பள்ளிவாசலுக்கு வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

3. சுல்தான் அப்துல் காதிர் வலீயுல்லா

யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இவர்கள் அடங்கப் பெற்றுள்ளார்கள். இவர்களின் அடக்கஸ்தளம் காரணமாகவே இப்பகுதியில் பள்ளிவாசலொன்று உருவாகக் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 சுல்தான் இவர்கள் நாகூர் ஷாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் கலீபாக்களில் ஒருவராக இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பஸ்ஹான் நவாஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.