இப்போது சமூகத்துக்குத் தேவை அனைவரையும் ஒரே கருத்தில் ஒன்று சேர்க்க முயற்சிக்கும் தலைமையல்ல. ஒரு பூந்தோட்டப் பராமரிப்பாளன் அத்தனை நிறம் கொண்ட பூக்களையும் ஒரே வாஞ்சையுடன் பராமரிப்பது போல, சமூகத்தின் அத்தனை நிறங்களையும் அங்கீகரித்து அனைத்துக்கும் சமமாக நீரூற்றிப் பராமரிக்கும் தலைமையே தேவை. மக்களின் மறுமைக்கான தலைவர்களை மக்கள் எதிர்பார்க்கவில்லை, அது அவரவரின் தனிப்பட்ட விவகாரம். ஆனால் இந்த உலகத்துக்கான தலைவர்களையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் இங்குள்ள பிரச்சினைகளுக்குத்தான் இப்போது தீர்வுகள் தேவைப்படுகின்றன. எப்போதும் உபதேசித்துக்கொண்டே இருக்கும் தலைவர்களை மக்கள் எதிர்பார்க்கவில்லை. நிலைப்பாடுகளையும், தீர்மானங்களையும் எடுக்கும் தலைவர்களையே மக்கள் தேடுகிறார்கள். தவறே விடாத தலைவர்களை மக்கள் எதிர்பார்க்கவேயில்லை. விடுகின்ற தவறுகளை ஏற்றுக்கொண்டு, தம்மைச் சரி செய்துகொள்கின்ற தலைவர்களையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒதுங்கி வாழ்ந்து மணம் பூசிக்கொள்ளும் தலைவர்களை மக்கள் எதிர்பார்க்கவில்லை. சேற்றில் புரண்டாலும் மக்களோடு மக்களாக இருப்பவர்களையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.! 

- அஃப்ஃபான் அப்துல் ஹலீம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.