ஒரு காலம் இருந்தது, அதில் குடும்பத்தவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வார்கள். பரஸ்பரம் இன்ப, துன்பங்களில் பங்கெடுப்பார்கள். 

குடும்பத் தலைவன் வீட்டுக்குப் பக்கத்தில் ஏதாவதொரு வேலை செய்வார். குடும்ப தேவைகளை பூரணப்படுத்தும் சிறியதொரு தொழிலாக  இருக்கும். வீட்டில் ஏதாவதொரு தேவை ஏற்பட்டால் ஒரு சில நிமிடங்களில் வந்துவிடுவார். இது குடும்பத் தலைவிக்கு பெரும் உதவி, ஒத்தாசையாக இருந்தது. ஒப்பீட்டளவில் சிக்கல்கள் குறைந்த, அமைதியான வாழ்க்கை ஓட்டம்.  

ஆனால், இன்றைய உலக ஒழுங்கு அவ்வாறில்லை. ஆண்கள் வெகு தூரம் சென்றுவிடுகின்றனர். அவ்வாறு செல்வதை பல வழிகளில் நியாயப்படுத்தி எம்மையே நாம் சமாதானப்படுத்திக் கொள்கிறோம். பெண் தனியாக வீட்டுப் பொறுப்பை சுமக்கிறாள். பிள்ளை வளர்த்தல் எனும் கனதிமிக்க பொறுப்போடு இன்னும் ஆயிரத்தெட்டு வீட்டுப் பணிகள். துணைக்கு யாருமில்லை. 

"பெண் விடுதலை" எனும் நவீன கால கோஷத்துக்குப் பதிலாக "ஆணுக்கு கட்டுப்போடல்" எனும் கருத்தாக்கத்தை நான் வலியுறுத்தி வருகிறேன். ஆரோக்கியமான குடும்ப உருவாக்கத்தில் கணவனும் மனைவியும் கூட இருந்து, ஒன்றாக பங்காற்ற வேண்டும் என்பதை மிகக் கவனமாக ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது.  

(எகிப்திய சிந்தனையாளர், தத்துவ அறிஞர் அப்துல் வஹ்ஹாப் மிஸைரியுடைய கருத்துக்கள்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.