மொரட்டுவையிலுள்ள இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தின் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

தேவையான ஆகக்குறைந்த தகைமைகள் :

01. (அ) வயது : 2021.03.31 ஆந் திகதியன்று 16 வயதிற்கும் 22 வயதிற்கும் இடைப்பட்டிருத்தல் வேண்டும்.

(ஆ) கல்வி : க. பொ. த. (சா./ த.) பரீட்சையில் தமிழ் அல்லது சிங்களம் (போதனா மொழி), கணிதம் உட்பட 06 பாடங்களில் 

ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

 அல்லது

 இலண்டன் சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலமொழி, கணிதம் உட்பட 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

விசேட திறமை-

 மின்சாரவியல்/ இலத்திரனியல்/ இயந்திரவியல் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு தேசிய/மாகாண மட்டத்தில் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட முதல் மூன்று இடங்களில் ஒன்றினை பெற்ற சான்றிதழுடன் (ஆ) கல்வித்தகைமையினை இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் பெற்றிருத்தல் வேண்டும்.

(இ) தேசிய தொழில் பயிலுநர் தொழிற்பயிற்சி அதிகார சபையில் 03 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கான பயிற்சியினைப் பெறுவோர் விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையோர் அல்லர்.

முழு விபரத்திற்கு வர்த்தமானியை பார்வையிடவும் : 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.