எம்.மனோசித்ரா - வீரகேசரி

விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் அடிமட்ட ஊடகவியலாளர்களைப் போன்று செயற்பட வேண்டாம் எனக் கூறியமை தவறான அர்த்தத்தில் அல்ல. எவ்வாறிருப்பினும் எந்தவொரு நபரையும் அவ்வாறு அடிமட்டமானவர்கள் என்று யாராலும் கூற முடியாது என்பது எனது நிலைப்பாடு என்பதால் அதற்கு மன்னிப்பு கோருகின்றேன் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கூறிய விடயம் தொடர்பில் கேட்ககப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

எனினும் யாரேனுமொரு நபர் அவ்வாறு உணருவார்களாயின் அது அவர்களது தனிப்பட்ட நிலைப்பாடாகும். அதற்கு நாம் பொறுப்பு கூற முடியாது. எனினும் ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் நாம் சகலருடனும் ஒன்றிணைந்து பயணிக்கின்றோம் என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.