தற்போது கடலில் எரியும் கப்பலில் 25 தொன் நைத்திரிக்கமிலம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
முதன் முதலாக ஜாபிர் இப்னு ஹையாம் ( Father of early chemistry)அறிமுகம் செய்யப்பட்ட நைத்திரிக்கமிலம் உலகின் மிக முக்கியமான கைத்தொழில் அமிலமாகும் .

இந்த அமிலம் இரசாயன பசளை தயாரிப்பில் மிக ,மிக முக்கியமானது.அத்துடன் சில நிறப்பொருட்கள் (dyes) ,பங்கஸ் கொல்லிகள் ,சில மருந்துகள் ,வெடி பொருட்கள் தயாரிப்பில் ,தங்க கைத்தொழலும் நைத்திரக்மிலம் பிரதானமாக பயன்படுகிறது .

அதி உயர் அமிலத்தன்மை உள்ள நீர் ,வளி ஆகிய இரண்டிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது .இந்த அமிலம் நீருடன் சேறும் போது அதன் PH பெறுமானம் பெருமளவிற்கு மாறுவதால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படும் .

01.நீர் வாழ் அங்கிகள் இறக்கும் 
02.முறுகைக் கற்பாரைகள் அழிவுறும் 
03.மீன்களின் உடலில் சேர்வதால் அவை மனிதனை பாதிக்கும் 
04.நன்னீரில் சேர்ந்தால் குடி நீர் பற்றாக்குறை ஏற்படும் .

வளியில் ஏற்பட முடியுமான பாதிப்புகள் .
01 உடலில் எரிவு (Burning and irritation) ஏற்படும் .
02.இது அதி உயர் செறிவில் சுவாசிகப்படும் போது தொண்டை உலரும் ,மூக்கு அடைப்பு ஏற்பட்டு இருமல் ஏற்படும.சுவாச சிரமங்கள் (Shortness of breathing and difficult to breathing ) ஏற்படும் ..அத்துடன் நெஞ்சு நோவு (Chest paining)ஏற்படலாம் .மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியது .அத்துடன் நீண்டகால சுவாச நோய்களை ஏற்படுத்தக் கூடியது.

நைத்திரக்கமிலம் புற்று நோயை ஏற்படுத்த முடியும் என இதுவரை தெளிவாக கண்டறியப்படவில்லை ஆனால் நீண்ட கால பாவனை புற்று நோயை ஏற்படுத்தக் கூடியது.

03.அமில மழை 
இதன் செறிவு வளியில் அதிகரிக்கும் போது அமில மழை பொழியும் இதனால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படும் .
01.மண்னின் PH மாறுவதால் விவசாய உற்பத்தி பாதிப்படையும் .
02.குடி நீர் பாதிப்படையும் 
03.உயிர்ப் பல்வகைமை (Bio Diversity )குறையும் .
04.கட்டிடங்கள் ,புராதன சின்னங்கள் சிதைவடையும் .

கடல் கரைகளில் வாழும் சிறுவர்கள் ,கர்பிணித்தாய்மார்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு கடற் கரைகளை தவிர்ப்பது சிறந்தது (கப்பல் அமிழ்ந்தால் ).

மீன் சாப்பிட முடியுமா ? 
எரிவுடன் கடல் ஆமைகள் ,மீன்கள் ,இன்னும் பல கடல் வாழ் உயிரினங்கள் நீர கொழும்பு முதல் களுத்துறை வரை இறந்த நிலையில் கரை தட்டியுள்ளது .கப்பல் அமிழ்ந்தால் முன்று மாதங்களுக்கு மேல் மீன் சாப்பிட முடியாத நிலை ஏற்படலாம் .தற்போதைய நிலையில் 2-3 வாரங்களுக்கு தவிர்ப்பது நல்லது.கடல் நீரின் கொள்ளளவு மிக ,மிக அதிகம் என்பதால் அது மிக விரைவாக ஐதாக்கமடையக் கூடிந்து ஆனால் வளியில் சேறும் அளவினால் இலங்கைக்கு நீண்ட கால பாதிப்பு ஏற்படுவது நிச்சயம் .அதி உயர் செறிவில் வளியில் பரவினால் கண்டி போன்ற நகர்களில் ஒளி இரசாயனத் தூமம்(Photochemical Smog) கூட ஏற்படலாம் .
எனவே இந்தக் கப்பல அமிழ்வது என்பது ஏலவே அமிழ்ந்துள்ள நாடு மேலும் அமிழ்வது நிச்சியம் .

குறிப்பு -இந்தக் கப்பலில் மேலும் பல ஆபத்தான இரசானப் பதார்தங்கள் உள்ளதாக அரசு அறிவித்துள்ளது அவை என துறைமுகத்தில பணியாற்றும் எனது நண்பர்கள் மூலம் அறிய முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்.சரியான தகவல் கிடைத்தவுடன் பதிவிடுகின்றேன்.
Micro plastic இன் பாதிப்பு தொடர்பாக தனியான ஒரு கட்டுரை எழுதவுள்ளேன்.

எம்.என் முஹம்மத் 
ஆசிரிய ஆலோசகர் (விஞ்ஞானம் )
களுத்துறை கல்வி வலயம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.