உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் மாநகர  முதல்வர் / தலைவர், பிரதி மாநகர முதல்வர் / உப தலைவர் / நகரசபை உறுப்பினர் / பிரதேச சபை உறுப்பினர் ஆகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசியல் உரிமைகள் உரித்துடைய அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமை லீவுகள் தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இது சம்பந்தமாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் மூலம் சுற்றறிக்கை ஒன்று  (அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை : 𝟏𝟐/𝟐𝟎𝟐𝟏) வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய உள்ளூராட்சி மன்றம் ஒன்றின் உப தலைவர் அல்லது உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் சம்பளத்துடனான விடுமுறை நாட்களை (மாதாந்தம்) 05 இல் இருந்து 06 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூராட்சி மன்றம் ஒன்றின் தலைவரது சம்பளத்துடனான விடுமுறை நாட்கள் 07 இல் இருந்து 08 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

சுற்று நிருபம்: 




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.