கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிறப்பித்த வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி அமைதியான போராட்டங்களை மேற்கொள்பவர்களை பொலிஸார் கைது செய்வது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்ற தீர்ப்பைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று (09) ஐக்கிய மக்கள் சக்தியால் ஒரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரன்சித் மத்தும பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க ஆகியோர் இதனை கோரினர்.இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருனவும் கலந்து கொண்டார். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.