அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் நடமாடும் கொவிட் தடுப்பூசி வழங்கும் நிகழ்வின் அடுத்த கட்டம் நாளை (21) ஆரம்பமாகவுள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வு 21 ஆம் திகதி வெயாங்கொடை பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும், 22 ஆம் திகதி வடத்தர பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும், 23 ஆம் திகதி திஹாரிய பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும், 24 ஆம் திகதி வீரங்குல பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும், 25 ஆம் திகதி அத்தனகல்ல பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும்,  27 ஆம் திகதி பெம்முல்ல பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும், 28 ஆம் திகதி அலவல பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும் நடைபெறவுள்ளது.

குறித்த பிரதேசங்களை சேர்ந்தவர்களது வீட்டில் அங்கவீனர்கள், வயோதிபர்கள் இருப்பின் கிராம சேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஊடாக பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.