கென்யாவுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, கென்ய வனவிலங்கு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. நஜிப் பலாலாவை 2021 செப்டெம்பர் 14ஆந் திகதி சந்தித்தார்.

அமைச்சர் ரத்நாயக்கவுடன் கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கணநாதனும் இணைந்திருந்தார்.

இலங்கை அமைச்சரை வரவேற்ற அமைச்சர் பலாலா, குறிப்பாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் மற்றும் சர்வதேச சுற்றுலா போன்ற பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் அந்த வளங்களை சந்தைப்படுத்துவதற்கான தேசிய உத்திகளில் பல ஒற்றுமைகள் இரு நாடுகளுக்கும் உள்ளதாகத் தெரிவித்தார்.

உள்ளூர் மற்றும் சர்வதேச நடைமுறைகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்க இலங்கையில் வனவிலங்குகள் மற்றும் வன வளங்களைப் பாதுகாப்பதே தனது அமைச்சின் பொறுப்பாகும் என்றும், வனவிலங்குகள் இலங்கையின் சுற்றுலாவுக்கு முக்கிய ஈர்ப்புக்களில் ஒன்றாக விளங்குவதாகவும் அமைச்சர் ரத்நாயக்க விளக்கினார்.
 
வனவிலங்குகள் மற்றும் வன வளங்களைப் பாதுகாப்பதன் மூலம் கென்யாவில் பல்லுயிர்ப் பெருக்கத்தை வெற்றிகரமாக வளர்ப்பதனைப் பாராட்டிய அமைச்சர் ரத்நாயக்க, இருதரப்புத் திட்டத்தின் கீழ் அந்தப் பகுதிகளில் கென்யாவின் அனுபவம் மற்றும் அறிவு ஆகியவற்றால் இலங்கை பயனடைய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். 

வனவிலங்குகள் மற்றும் அனுபவத்தின் இயற்கைச் சூழல் குறித்த இலங்கையின் பாதுகாப்புத் திட்டத்திலிருந்து கென்யாவும் பயனடைய முடியும் என கென்ய அமைச்சர் நேர்மறையாக பதிலளித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.