சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த பதவி நீங்கியிப்பதானது ராஜபக்ஷ அரசினால் நடத்தப்பட்ட வெறும் கண்துடைப்பு நாடகமே என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விமர்சித்துள்ளார்.

கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது தந்தையார் பற்றிய செயற்பாடுகளை கண்டி - உடதலவின்ன பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களைச் சென்று கேட்டால் தெரியவரும். சிறைச்சாலைக்குச் சென்று தமிழ்க் கைதிகளை முழந்தாலிடச் செய்துவிட்டு பின்னர் மன்னிப்பு கோரி இராஜினாமா செய்ததை ஏற்க முடியாது; இது மனித உரிமை மீறல். அப்படியென்றால் நானும் வெளியே சென்று நபரைப் பிடித்து சித்திரவதை செய்த பின் மன்னிப்பு கேட்டு இராஜினாமா செய்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

யாழ் நியூஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.