ஜனாதிபதி தேர்தலின் போது மக்களுக்கு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம் 10 வருடங்களில் இலங்கை படிப்படியாக இயற்கை விவசாயத்தை நோக்கி நகரும் என அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில்  கூறப்பட்டிருந்தாலும் இந்த அனைத்து வாக்குறுதிகளையும் மீறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கே நிவாரணம் கிடைக்கும் என தெரிவித்த எதிர்கட்சி தலைவர்,இந்த அரசாங்கம் இந் நாட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்வது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படுகின்ற 'கிராமத்திற்கு கிராமம் வீட்டிற்கு வீடு நகரத்திற்கு நகரம்' நிகழ்ச்சியின் மற்றுமொரு கட்டம் இன்று (24) திஸ்ஸமஹாராம வனசபுஹல பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதன் போது பிரதேச மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சிணைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் தனது கவனத்தைச் செலுத்தினார்.இதன் போது கருத்துத் தெரிவிக்கையிலயே அவ்வாறு இவ்வாறு தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வரவு செலவு திட்டத்தில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், உரத்தடையை இரவோடு இரவாக நீக்கியதாக கூறும் அரசாங்கம் காலையில் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் மாலையில் இன்னொன்றைச் சொல்லும் போதே வர்த்தமானியை மீளப்பொற்றுக் கொள்கிறது எனவும் தெரிவித்தார்.

நஞ்சற்ற விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்காக 4000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக கூறும் அரசாங்கம், இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள களைக்கொல்லிகளை அகற்ற இரண்டு ஹெக்டேருக்கு ரூ.5,000 வீதம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சேதன உர உற்பத்திக்காக விவசாயிகளுக்கு 35,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கும் அதேவேளை தனியார் நிறுவனங்களுக்கு இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

இத்தனைக்கும் மத்தியில் இயற்கை விவசாயக் கொள்கைகள் தான் நாட்டில் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதியின் அறிவிப்பின் மூலம் தெரிவித்து அரசாங்கம் இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கம் கிராமம் நகரமாக எடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் திரு.ரணசிங்க பிரேமதாசவின் கருத்திட்டம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அந்த மக்கள் சார் வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.