தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 செப்டெம்பரின் 6.2 சதவீதத்திலிருந்து 2021 ஒக்டோபரில் 8.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 செப்டெம்பரின் 10.0 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 11.7 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு)  2021 ஒக்டோபரில் 3.0 சதவீதத்திலிருந்து 2021  ஒக்டோபரில் 5.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண், 2021 செப்டெம்பரின் 5.5 சதவீதத்திலிருந்து 2021 ஒக்டோபரில் 5.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.

முழு அறிக்கை 

இலங்கை மத்திய வங்கி

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.